
பால் கலப்படம் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சில தனியார் பால் நிறுவனங்கள் பால் கெடாமல் இருப்பதற்காக ரசாயணத்தை கலப்பதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
பால் குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை என்றால் தூக்கில் தொங்கவும் தயார் எனவும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவும் தயார் என பேட்டியளித்தார்.
இதையடுத்து வந்த ஆய்வு முடிவுகளில் உயிருக்கு ஆபத்தான ராசாயணம் எதுவும் கலக்கப்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உயர்நீதி மன்றத்தில் தகவல் அறிக்கை தாக்கல் செய்தார்.
முடிவுகள் வெளியாகும் வரை அமைதி காத்திருந்த பால் முகவர்கள் சங்கம் அமைச்சருக்கு எதிராக கண்டன போர்க்கொடியை உயர்த்தியது.
இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராஜேந்திர பாலாஜி தனியார் பாலிலும், பால் பவுடரிலும் காஸ்டிக் சோடாவையும் பிளீச்சிங் பவுடரையும் சேர்ப்பதற்கான தகுந்த ஆதாரங்களை வெளியிட்டார்.
இதையடுத்து அவர் குற்றம் சாட்டிய நெஸ்லே மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் பால் கலப்பட புகாருக்கு மறுப்பு தெரிவித்தது.
இதனிடையே அதிமுக கட்சிக்குள்ளேயே ராஜேந்திர பாலாஜியை விமர்சிக்க தொடங்கினர். மேலும் ஸ்டாலினும் இதுகுறித்து விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் பால் கலப்படம் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.