
இந்துக்களுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் கமலஹாசன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் கட்சியினர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத் கட்சியின் சென்னை மாவட்ட தலைவராக இருப்பவர் ரவி. இவர் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், நடிகர் கமலஹாசன் விளம்பரத்திற்காகவும் சுய லாபத்திற்காகவும், ட்விட்டர் கட்சியை பிரபலபடுத்தவும் தொடர்ந்து இந்து சமயத்தில் பற்றுள்ளவர்களை சிறுமைப்படுத்தும் எண்ணத்துடன் பேசி வருவதாக தெரிவித்துள்ளார்.
காவி உடுத்திய ஹிந்துக்களை தீவிரவாதி என சித்தரிப்பதாகவும் அவரின் கருத்து இந்துக்களிடையே பிரிவுகளை ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே கமல் மீது தகுந்த வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.