புகுந்து விளையாடிய விஷாலுக்கு புது பிரச்னை... சட்ட நடவடிக்கை பாயுமாம்..!

 
Published : Dec 08, 2017, 01:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
புகுந்து விளையாடிய விஷாலுக்கு புது பிரச்னை... சட்ட நடவடிக்கை பாயுமாம்..!

சுருக்கம்

vishal will face new problem over fake signatures issue

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் புகுந்து விளையாடிய நடிகர் விஷால் மீது அனேகமாக நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது. தேர்தல் அதிகாரி மீது புகார் கூறினார் விஷால். 

வேட்புமனுவில், தன்னை முன்மொழிந்தவர்களுடைய கையெழுத்தை போலியாக பயன்படுத்தியதாக விஷால் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இந்தப் புகாரில் விஷால் மீது நடவடிக்கைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.  சுமதி, தீபன் எனும் இருவர் தன்னை முன்மொழிந்து வேட்பு மனுவில் கையெழுத்திட்டதாக விஷால் கூறி வந்தார். ஆனால்,  விஷாலை முன்மொழிந்து தாங்கள் கையெழுத்திடவில்லை என்று சுமதி, தீபன்  இருவரும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் வாக்குமூலம் அளித்தனர். 

விஷால் தங்கள் கையெழுத்தை போலியாக பயன்படுத்தியதாக சுமதி, தீபன் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தனர். ஆனால், அவர்கள் இருவரும் விஷால் மீது புகார் அளிக்கப்படும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இருப்பினும் தாங்கள் இருவரும் விஷாலை முன்மொழிந்து கையெழுத்திடவில்லை என்று சுமதி, தீபன் அளித்த வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத் தக்கது. 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!