கமல் ஆதரவோடு ஆர்.கே.நகர் தேர்தலில் குதிக்கிறாரா விஷால்..?

 
Published : Nov 29, 2017, 08:27 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
கமல் ஆதரவோடு ஆர்.கே.நகர் தேர்தலில் குதிக்கிறாரா விஷால்..?

சுருக்கம்

vishal support kamal for rk nager election

நடிகர் கமலஹாசன் கண்டிப்பாக அரசியலுக்கு வருவது உறுதி என கடந்த மாதமே கூறிவிட்டார். மேலும் அவ்வப்போது தன்னுடைய அரசியல் கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தும் வருகிறார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

இந்நிலையில் ஏற்கனவே கமலஹாசன் ஆதரவோடு நடிகர் சங்கத் தேர்தலிலும், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலும் வெற்றி பெற்ற விஷால் ஆர்.கே.நகர் தேர்தலில் கமலுக்கு ஆதரவாக களமிறங்க உள்ளதாக ஒரு வதந்தி பரவி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் தினகரனை சந்தித்து விஷால் பேசியது அரசியல் நோக்கத்தோடு தான் என கிசுகிசுக்க பட்ட நிலையில் இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு... அரசியல் பற்றி இப்போது வேண்டாம் என கூறி பதில் கூறாமல் விஷால் நழுவினார்.

இது குறித்து சினிமா வட்டாரத்தில்... ஏற்கனவே நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், நடிப்பு என அனைத்திலும் கவனம் செலுத்தி வரும் விஷால் அரசியலில் குதித்தால் அனைத்தும் கெட்டு விடும் என ஒரு தரப்பினர் கூறி வந்தாலும், சினிமாவில் உள்ள ஆயிரக்கணக்கான பிரச்சனைகளை தீர்க்க இவர் சட்ட மன்றம் சென்றால் நன்றாக இருக்கும் என ஒரு தரப்பினரும் பேசி வருகின்றனராம்.

யார் என்ன நினைத்தாலும் நடக்கப் போவது நடந்தே தீரும்... பொறுத்திருந்து பார்ப்போம்... விஷாலின் ஆதரவு கமலுக்கா... தினகரனுக்கா என!

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!