
ஆர்.கே.நகரில் போட்டியிடுவதாக இருந்த நடிகர் விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி வேலுசாமி நிராகரித்துள்ளார். விஷாலை முன்மொழிந்தவர்களின் பெயர்களை தவறாக குறிப்பிட்டுள்ளதற்காக வேட்பு மனுவை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, தண்டையார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் விஷால் வேட்புமனு தாக்கல் செய்யும் அதே நேரத்தில், தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் அவருக்கு எதிராக சேரன் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில்,தீபாவின் வேட்பு மனுவை அடுத்து தற்போது விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி வேலுசாமி நிராகரித்துள்ளார்.
விஷாலை முன்மொழிந்தவர்களின் பெயர்களை தவறாக குறிப்பிட்டுள்ளதற்காக,அதாவது போலி கையெழுத்து என கூறி வேட்பு மனுவை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, விளக்கம் கேட்க தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு நேரில் சென்ற விஷால், அங்கேயே தரையில் அமர்ந்து தனது ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் அப்பகுதயில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது