
நடிகர் விஷால் திரைத்துறையில் உதவி இயக்குனராக அறிமுகம் கொடுத்து, தற்போது நடிகர், நடிகர் சங்க பொது செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என பல்வேறு பதவிகளையும் வகித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் ஆர் கே நகரில் நடைபெற உள்ள தேர்தலில் கமலஹாசன் அணியில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதனை முற்றிலும் மறுத்து வருவது போல் கூறி வந்த விஷால் தற்போது ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஆனால் இவர் கமலஹாசன் அணியில் இணையாமல் சுயேச்சையாக போட்டியிடுவார் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஆர்.கே நகர் இடைதேர்தல் களத்தில் ஆளும் கட்சி சார்பில் மது சூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், டிடிவி தினகரன், ஜெ .தீபா போன்றோர் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும் நிலையில் தற்போது புதிதாக விஷாலும் இணைந்துள்ளார்.
அரசியல் ஆசை யாரை விட்டு வைத்தது... பொறுத்திருந்து பாப்போம் என்ன நடக்கிறது என்று!