நரேந்திர மோடியும், அமித்ஷாவும்.. தமிழகத்துக்கு என்ன செஞ்சாங்கன்னு தெரியுமா..? தெறிக்க விடும் மாணிக்கம் தாகூர்

By Raghupati RFirst Published Jan 19, 2022, 6:10 AM IST
Highlights

தமிழகம் அமைதி பூங்காவாக வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பை சார்ந்தவர்கள் தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள் என்று கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர். 

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நேற்று  செய்தியாளர்களை சந்தித்த விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், ‘குடியரசு தினவிழாவில் வேலுநாச்சியார், வ.உ.சி உருவம் பொறித்த ஊர்திகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் விரிவான கடிதம் எழுதியுள்ளார். நானும் பிரதமர் தலையிட வேண்டும் என்பதற்காக கடிதம் எழுதி உள்ளேன். அதிகாரிகளின் போக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர்களை அவமானப்படுத்தியதகாக மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். 

இதற்காக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வருவோம். சுதந்திர போராட்ட வீரர்களை அவமானப்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது. கைத்தறி நெசவாளர்கள் அதிகம் உள்ள அருப்புக்கோட்டை நகர் பகுதியில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக மத்திய தொழில் துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளேன். காங்கிரசை பொறுத்தவரை தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தேவை. 

இது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு அளிக்கப்படும், நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளது குறித்து அமித்ஷாவை பார்த்து மனு அளித்துள்ளோம் மூன்று நாட்கள் காக்க வைத்து மனுவை பெற்றுள்ளார். நரேந்திர மோடியும் அமித்ஷாவும் தமிழர்களுடைய எண்ணங்களுக்கு மதிப்பு அளிப்பதில்லை. 

நீட் விலக்கு தேவை என்பதை நாடாளுமன்றத்தில் மீண்டும் வலியுறுத்துவோம். தமிழகத்தில் மக்களாட்சி நடக்கிறது பெரும்பான்மை உறுப்பினர்களுடன் அமைச்சர் மு க ஸ்டாலின் ஆட்சி புரிகிறார், அதற்கு எப்படியாவது களங்கம் ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்ட ஆர்எஸ்எஸின் சதியாக இதை நான் பார்க்கிறேன், இந்த சதி தமிழகத்தில் எடுபடாது. தமிழகம் அமைதி பூங்காவாக வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. 

ஆர்எஸ்எஸ் அமைப்பை சார்ந்தவர்கள் தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள். அண்ணாமலையை பொருத்தவரை அவர் சட்டமன்ற தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர். தமிழகத்தைப் பொறுத்தவரை ஆர்எஸ்எஸ் மக்கள் விரோத இயக்கமாக செயல்படுகிறது. அண்ணாமலை இவர்களின் கைப்பாவையாக செயல்படுகிறார் என்றும் கடுமையாக விமர்சித்தார்.

click me!