கைமீறிய சட்ட ஒழுங்கு, கண்கள் சிவந்த ஸ்டாலின்.. களத்தில் இறங்கிய சைலேந்திர பாபு.. 560 ரவுடிகள் கைது.

Published : Sep 24, 2021, 10:44 AM ISTUpdated : Sep 24, 2021, 10:51 AM IST
கைமீறிய சட்ட ஒழுங்கு,  கண்கள் சிவந்த ஸ்டாலின்..  களத்தில் இறங்கிய சைலேந்திர பாபு.. 560 ரவுடிகள் கைது.

சுருக்கம்

இதன் அடிப்படையில் நேற்று நள்ளிரவு  தமிழகம் முழுவதும் குற்றப் பின்னணி உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த ரவுடிகளின் வீடுகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். 

குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு உள்ள குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளின் வீடுகளில் சென்னை மாநகர போலீசார் நேற்று நள்ளிரவு அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில் பயங்கர ஆயுதங்களுடன் lதமிழகம் முழுவதும் 560 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு. க ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மக்கள் நல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், அது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது. அதேநேரத்தில் தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. 

பல்வேறு அரசு துறைகளை சீரமைக்கும் பணியில் அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் அரசு அதிரடியாக களம் இறங்கியுள்ளது குறிப்பாக சமீபகாலமாக முன்விரோதம் காரணமாக ரவுடிகள் இடையே மோதல் ஏற்பட்டு கொலை நடக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. சென்னை கே.கே நகரில் முன்விரோதம் காரணமாக வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் பரபரப்பானது. அதேபோல மயிலாப்பூரில் ரவுடி மயிலை சிவக்குமாரின் உதவியாளர் கொலை சம்பவம் சட்டம் ஒழுங்கை கேள்வி எழுப்பியது, தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே கொலைகள் அரங்கேறி வரும் நிலையில், தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட எஸ்.பிக்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில் ஸ்டாமிங் ஆபரேஷன்  என்ற பெயரில் கடந்த 5 ஆண்டுகளில் கொலை வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீட்டை கண்காணித்து அவர்கள் பதிவு வைத்திருக்கும் ஆயுதங்களை பறிமுதல் செய்து அவர்களை கைதுசெய்ய உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில் நேற்று நள்ளிரவு  தமிழகம் முழுவதும் குற்றப் பின்னணி உள்ள ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த ரவுடிகளின் வீடுகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் பல ரவுடிகளின் வீடுகளில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது, குறிப்பாக சென்னை புளியந்தோப்பு, மாதவரம், மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீடுகளில் காவல் துணை ஆணையர் தலைமையில் சோதனை நடைபெற்றது. அதில் ரவுடிகளின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 கத்திகள் மற்றும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. குறிப்பாக அதி பயங்கரமான 5 ரவுடிகளை கைது செய்தனர், மீதமுள்ளவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கி அனுப்பி வைத்தனர். இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என எதிர்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில் அதிரடியாக போலீசார் ரவுடிகளை கடுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!