
சென்னையில் திருமணமாகி 24 நாட்களில் கணவர் வீட்டில் இருந்து 80,000 ரூபாய் மற்றும் ம் நான்கு சவரன் நகையை திருடிச்சென்ற மனைவியை போலீசார் தேடிவருகின்றனர்.
சென்னையின் வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமன். 53 வயதான இவரது முதல் மனைவி சுசிலா. திருமணமாகி 18 ஆண்டுகளாகியும் அவர்களுக்கு குழந்தை இல்லை. கோயில், குளம் என்று இந்த தம்பதிகள் அலைந்து திரிந்தாலும் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை.
ஆனால் வெங்கட்ராமனோ தனக்கு கண்டிப்பாக ஆண் வாரிசு வேண்டும் என்பதில் உறுதியான இருந்தார். இதையடுத்து வெங்கட்ராமன் தனது மனைவி சுசிலாவை சில மாதங்களுக்கு முன் விவாகரத்து செய்தார். வேறு ஒரு திருமணம் செது கொள்ளவும் முடிவு செய்தார்.
இது தொடர்பாக திருமண தகவல் மைய இணையதளத்தில் இரண்டாவது திருமணத்துக்கு பதிவு செய்துள்ளார். இதைப்பார்த்து ஆந்திராவைச் சேர்ந்த ரமணம்மா (என்ற 36 வயதுப் பெண் வெங்கட்ராமனை தொடர்பு கொண்டு, தனக்கு யாரும் இல்லை என்றும், உங்களை திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்தார் தெரிவித்துள்ளார்.
இதைப்பார்த்து பரிதாபமடைந்த வெங்கட்ராமன், அவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். இதன்படி இவர்கள் கடந்த மே 2ம் தேதி வில்ல்வாக்கத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் ரமணம்மாவை திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் ரமணம்மா கடந்த மே 26ம் தேதி, ஆந்திராவில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்று வருவதாக வெங்கட்ராமனிடம் கூறிவிட்டு சென்றார். அவர் போகும் போது வெங்கட்ராமன் வீட்டில் இருந்த 80,000 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 4 சவரன் நகைகளை எடுத்து சென்றுள்ளார். இதை சில நாட்களுக்கு பின் கவனித்த வெங்கட்ராமன், ரமணம்மாவிடம் போன் செய்து கேட்டுள்ளார்.
இதற்கு சரியாக பதில் அளிக்காத ரமணம்மா, சில மணி நேரத்தில் தனது மொபைலை சுட்ச் ஆப் செய்துள்ளார். இது குறித்து வெங்கட்ராமன் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரமணம்மாவை தேடி வருகின்றனர்.