கூலி வேலை செய்து தியாகியை கவுரப்படுத்திய கிராமத்து மாணவர்கள்.! நெகிழ்ந்து போன தியாகி கண்ணதாசன்.!

By T BalamurukanFirst Published Aug 15, 2020, 9:21 PM IST
Highlights

தியாகி ஒருவரை கௌரவிக்கும் விதமாக கூலி வேலை செய்து ஒரு மாதம் சேர்த்து வைத்த பணத்தை வைத்து சுதந்திர தியாகி ஒருவரை 74வது சுதந்திர தின விழா கொண்டாடி மகிழ்ந்த சிறுவர்களின் செயலுக்கு கௌரவமும், பாராட்டும் கிடைத்து வருகின்றது.


தியாகி ஒருவரை கௌரவிக்கும் விதமாக கூலி வேலை செய்து ஒரு மாதம் சேர்த்து வைத்த பணத்தை வைத்து சுதந்திர தியாகி ஒருவரை 74வது சுதந்திர தின விழா கொண்டாடி மகிழ்ந்த சிறுவர்களின் செயலுக்கு கௌரவமும், பாராட்டும் கிடைத்து வருகின்றது.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி சேர்ந்தவர் சுதந்திர போராட்ட தியாகி கண்ணதாசன். வயது80. தியாகி கண்ணதாசன் பற்றி மாணவர்களுக்கு கிராமத்தில் உள்ளவர்களிடம் அவருடைய வாழ்க்கை வரலாற்றை கேட்டிருக்கிறார்கள்.அவர்கள் சொன்ன தகவல்கள் மாணவர்களுக்கு உணர்ச்சிபூர்வமாக இருந்தது. சுதந்திரம் பெற வீரர்கள் ஆற்றிய அரும்பணி அவர்கள் சிந்திய ரத்தம். வேதனைகள் போராட்டங்கள் எல்லாம் மாணவர்களின் மனதில் தீயாய் இரத்தம் கொதிக்க வைத்தது.இப்படிபட்ட தியாகிகளை நாம் பெற்ற சுதந்திர தினத்தன்று நிச்சயம் கவுரவப்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்த சிறுவர்கள் சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள்.

மாணவர்கள் திரட்டிய நிதி:
 சபீர் தலைமையிலான ஐந்து சிறுவர்கள் ஒன்றுகூடி தியாகியை கௌரவிக்க முடிவு செய்தனர். அங்குள்ள சத்தியா முயல் பண்ணையில் முயல்களுக்கு தீவனம் வழங்கும் பணி தருமாறு அதன் உரிமையாளர் சத்யாவை அணுகியுள்ளனர்.

சிறுவர்களின் நோக்கம் அறிந்து அவர்களுக்கு உதவிசெய்ய சத்யா முன்வந்தார். அதன்படி கடந்த ஒரு மாதமாக அங்கு பணியாற்றி பெற்ற ஊதியத்தைக் கொண்டு சுதந்திர தின விழாவைக் கொண்டாடி இருக்கிறார்கள்.ஊரடங்கு காரணமாக பள்ளி விழாக்கள் ரத்து செய்யப்பட்டிருந்ததால் மாற்று இடத்தைத் தேடியுள்ளனர். முயல் பண்ணை உரிமையாளர் சத்யா தனது இடத்தை வழங்க முன்வந்தார். அதைத்தொடர்ந்து சேர்த்துவைத்த பணத்தைக்கொண்டு உள்ளூரில் சிலரை அழைத்து தியாகி கண்ணதாசனை கவுரவப்படுத்தினர்.
அவரை தேசியக்கொடி ஏற்ற வைத்து  இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். அது மட்டுமல்லாமல் நிகழ்ச்சியில பங்கேற்ற அனைவருக்கும் உணவு வழங்கி தங்களின் ஆசையை நிறைவேற்றிக் கொண்டனர். சிறுவர்களின் இந்த தேசப்பற்று பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.
 

click me!