விக்கிரவாண்டி தொகுதியில் திடீர் திருப்பம்... அதிமுக வேட்பாளருக்கு ஆப்பு வைக்கும் பாமக நிர்வாகி..!

By vinoth kumarFirst Published Sep 25, 2019, 4:27 PM IST
Highlights

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பாமக முன்னாள் அமைப்புச் செயலாளர் ராஜா சுயேட்சையாக போட்டியிடுவது ஆளும் அதிமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பாமக முன்னாள் அமைப்புச் செயலாளர் ராஜா சுயேட்சையாக போட்டியிடுவது ஆளும் அதிமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து, அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தொகுதியில், திமுகவும், அதிமுகவும் நேரடியாக போட்டியிடுகின்றனர். அதிமுக தரப்பில் சி.வி.சண்முகத்தின் தீவிர ஆதரவாளரான காணை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முத்தமிழ்ச்செல்வனும், திமுக தரப்பில் விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் புகழேந்தியும் களமிறங்க உள்ளனர். இதனால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. 

 

இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கு அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக பாமக தலைவர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இதனிடையே, திடீர் திருப்பமாக அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், பாமக முன்னாள் அமைப்புச் செயலாளர் ராஜா சுயேட்சையாக போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

இதனால், அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டு பாமக நிர்வாகி சுயேட்சையாக போட்டியிடுவதால் விக்கிரவாண்டி தொகுதியை திமுக கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

click me!