இனி, மைக்கும் கிடையாது...மயக்கவும் முடியாது...!! விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 19, 2019, 6:06 PM IST
Highlights

வாக்குப்பதிவன்று,  இரண்டு தொகுதிகளிலும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட உள்ளது.  தனியார் தொழிற்சாலைகள் முதல் அரசு நிறுவனங்கள்வரை அனைத்திற்கும் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.  இரண்டு தொகுதிகளிலும்  மிக அமைதியான முறையில் தேர்தல் நடப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.  திங்கட்கிழமை நிறைவான வாக்கு பதிவு நடைபெறு இரண்டு கட்சிகளுமே தீவிரமாக களத்தில் பணியாற்றி வருகின்றனர்.

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் திங்கட்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. இதனால் அத்தொகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி, மற்றும் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில்  வரும் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.  நாங்குநேரியில் அதிமுக சார்பில் நாராயணன், காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். விக்ரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச் செல்வன் , திமுக சார்பில் புகழேந்தி உள்ளிட்ட 8 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  இந்த இரண்டு தொகுதிகளிலும் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்றுவந்தது,  அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,  உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.  திமுக சார்பில் அதன் தலைவர் மு.க ஸ்டாலின், மற்றும் அதன் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அதில் ஒருவரைமாற்றி ஒருவர் கடுமையாகச் சாடிவந்த நிலையில் இன்று மாலையுடன், பிரச்சாரம் ஓய்ந்தது. இந்நிலையில் வாக்கு பதிவுக்கான பணிகளில்  அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.வாக்குப்பதிவன்று  நாங்குநேரியில், சுமார் 129  வாக்குச்சாவடிகளில் சுமார் 1.400 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். பாதுகாப்புக்காக சுமார் 800 போலீஸாருடன், மூன்று கம்பெனி துணை ராணுவ படையினர், மற்றும் மூன்று கம்பெனி தமிழ்நாடு சிறப்பு படையினர் தேர்தல் பணியில் ஈடுபடஉள்ளனர்.  விக்கிரவாண்டி தொகுதியில் 225 வாக்குச்சாவடிகளில் சுமார் 1,330 தேர்தல் பணியாளர்கள் மற்றும் 1,000 போலீஸார் மற்றும் 3 கம்பெனி துணை ராணுவப் படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நாங்குநேரியைக் காட்டிலும், விக்ரவாண்டி பதற்றமானதொகுதி என்பதாலும், அதிமுக, திமுக நேரடி போட்டியில் உள்ளதால் அங்கு  பாதுகாப்புக்கு  கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

வாக்குப்பதிவன்று,  இரண்டு தொகுதிகளிலும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட உள்ளது.  தனியார் தொழிற்சாலைகள் முதல் அரசு நிறுவனங்கள்வரை அனைத்திற்கும் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை அளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.  இரண்டு தொகுதிகளிலும்  மிக அமைதியான முறையில் தேர்தல் நடப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.  திங்கட்கிழமை நிறைவான வாக்கு பதிவு நடைபெறு இரண்டு கட்சிகளுமே தீவிரமாக களத்தில் பணியாற்றி வருகின்றனர்.  இத்தனை நாட்களாக  நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையோடு ஓய்ந்ததால்  இரண்டு தொகுதி மக்களும் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.

click me!