விக்கிரவாண்டி தொகுதியில் ஜெட் வேகத்தில் முன்னேறும் அதிமுக ! ஆமை வேகத்தில் திமுக !!

By Selvanayagam PFirst Published Oct 2, 2019, 9:11 PM IST
Highlights

விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே அதிமுக தொண்டர்கள் அதிரடியாக களமிறங்கி தேர்தல் வேலையைத் தொடங்கிவிட்டனார். அதே நேரத்தில் திமுக தற்போது தான் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில நாட்கள் முன்பே அதிமுக சார்பில் ஒவ்வொரு பூத் அளவிலும் , சுவர் விளம்பரங்கள் உள்ளிட்ட ஆயத்தப் பணிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆட்கள் இதற்கான பணிகளை கச்சிதமாக செய்து வருகின்றனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கடந்த 30 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் செயல்வீரர்கள் கூட்டத்தை மாநாடு போல நடத்தி, அதிமுக நிர்வாகிகள் அனைவருக்கும் பிரியாணி விருந்து உட்பட செமையாக கவனித்து உள்ளார் அமைச்சர் சி.வி. சண்முகம்.

அதிமுக இப்படி வேகமாக போய்க் கொண்டிருக்கும் அதே நேரத்தில்  திமுகவும் சளைக்காமல் பொறுப்பாளர்களைக் களமிறக்கிவிட்டிருக்கிறது. திமுகவில் கடந்த மூன்று நாட்களாக ஒவ்வொரு கிராமமாக சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பூத்-தின் உள்ளூர் நிர்வாகிகளை வெளியூர் நிர்வாகிகள் சந்தித்து வருகின்றனர். 

அக்டோபர் 1 முதல் முழு வீச்சில் திமுக களமிறங்கிவிட்டது. இதை ஒட்டி ஒவ்வொரு பூத் அமைப்புக்கும் தலா ஐயாயிரம் ரூபாய் நேற்று வழங்கப்பட்டிருக்கிறது. இதை வைத்துதான் சுவர் விளம்பரம் போன்ற ஆரம்பகட்டப் பணிகள், கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்துக் கூட்டி வருவது உள்ளிட்டவற்றை திமுக நிர்வாகிகள் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஆனால் அதிமுகவினரின் கைகளில் பணம் அதிகமாகப் புழங்குவதைப் போல் திமுகவினரின் கைகளில் பணம் கொடுக்கப்படவில்லை. அதிமுகவினருக்கு 20 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்ட வகையில், திமுகவோ முதல் கட்ட நிதியாக 5 ஆயிரம்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது திமுக நிர்வாகிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதே நேரத்தில்  அதிமுக நிர்வாகிகள் மூலம்  அமைச்சர் சி.வி. சண்முகம் பல  கிராம திமுக நிர்வாகிகளைக் குறிவைத்து அடுத்த ஸ்பெஷல் அசைன்மென்ட்டை கொடுத்திருக்கிறார்  எனவும் கூறப்படுகிறது. விக்கிரவாண்டி தொகுதியைப் பொறுத்தவரை தற்போது அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் முன்னிலை பெற்றுள்ளது என்றே கூறப்படுகிறது.

click me!