மறுபடியும் சீனுக்கு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்.. ஜூலை 5ல் திமுகவிற்கு எதிராக ஆட்டம் ஆரம்பம்...!

By vinoth kumarFirst Published Jun 28, 2021, 7:14 PM IST
Highlights

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூலை 5ம் தேதி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூலை 5ம் தேதி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. 

அதன்படி செங்கல்பட்டு, வேலூர், கடலூர், விழுப்புரம், கோவை, தஞ்சை, மதுரை, கன்னியாகுமரி உள்பட 31 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது. சில மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101-க்கு விற்பனையானது. இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பெட்ரோல், டீசல் உயர்வுக்கு விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் ஹட்ரோ கார்பன் திட்டத்தை  கைவிட வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்தும், கொரோன தொற்று பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், கட்டுமான பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், மின்சாரம் போன்ற விலைவாசி உயர்வை கண்டித்தும் தேமுதிக சார்பில்  வரும் 5 ம் தேதி காலை 10 மணியளவில், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறை அனுமதியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.  

click me!