தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி... என்னாச்சு அவருக்கு?

By Narendran SFirst Published Jun 14, 2022, 9:54 PM IST
Highlights

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருக்கும் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் தீவிர அரசியலில் இருந்து விலகி இருக்கிறார். கட்சி நடவடிக்கைகளை அவரின் குடும்பத்தினர் கவனித்துக்கொள்கிறார்கள். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்கூட அவர் போட்டியிடவில்லை. விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் மட்டுமே அவ்வப்போது சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விஜயகாந்த் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வழக்கமான சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளதாகவும், சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவால் அடிக்கடி பாதிக்கப்படும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். தொண்டையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு விஜயகாந்த் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தைராய்டு உள்ளிட்ட கோளாறுகளும் அவருக்கு ஏற்பட்டுள்ளன. உடல்நலம் மற்றும் ஹார்மோன் பிரச்சினைகள் காரணமாக அவரது ஞாபக சக்தியும் குறைந்து உள்ளது. ஏற்கனவே சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்துக்கொண்ட விஜயகாந்த், அதன் பிறகு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். அமெரிக்க சிகிச்சைக்கு பிறகும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. சர்க்கரை குறைபாடு மற்றும் சில வயோதிகம் சார்ந்த பிரச்னைகளும் சேர்ந்து கொண்டு தான் விஜயகாந்த்தை பாடாய்படுத்துகிறது.

click me!