அமைதியாக்கிய அதிமுக...! கிளப்பிவிட்ட விஜயகாந்த்...! கூட்டத்தில் புகுந்த கலப்பு தொண்டர்கள்...!

 
Published : Jan 21, 2018, 01:48 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
அமைதியாக்கிய அதிமுக...! கிளப்பிவிட்ட விஜயகாந்த்...! கூட்டத்தில் புகுந்த கலப்பு தொண்டர்கள்...!

சுருக்கம்

vijayakanth talks about edappaadi palanichamy in sivakasi protest

போராட்டம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி கடந்த 26 நாட்களுக்கு மேலாக கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

வர்த்தகம்

பல நாட்களாக பட்டாசு ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் அங்கு பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 850க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி வர்த்தகம் நடைபெறும். 

சிவகாசியில் கடந்த 3 வாரங்களாக வேலையில்லாமல் கடும் சிரமத்தை தொழிலாளர்கள் சந்தித்து வருகின்றனர். 

வழக்கு

பட்டாசுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இருந்தாலும் பட்டாசுத் தொழிலை  பாதுகாக்க மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என பட்டாசு ஆலை நிர்வாகிகளும், பட்டாசுத் தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதிமுக

இதனிடையே பட்டாசு தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போராட்டக்காரர்களை அமைதியாக்கினார். 

ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் இன்று பட்டாசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக தேமுதிக போராட்ட களத்தில் குதித்துள்ளது. இதனால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சிவகாசியில் நடைபெற்று வருகிறது. 

ஊழல்

இதில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவதாக சாடினார். 

மேலும் ஜெயலலிதா வழி என கூறி ஆட்சியாளர்கள் கோடி கோடியாக லஞ்சம் வாங்குவதாகவும் மத்திய அரசின் அனுமதியுடன் தான் சீனப்பட்டாசு இறக்குமதி சேய்யப்படுவதாகவும் தெரிவித்தார். 

ஆட்சி கவிழும்

மேலும் சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். எடப்பாடி ஆட்சி விரைவில் கவிழும் எனவும் ஆனால் அது எப்போது என்று தெரியாது எனவும் குறிப்பிட்டார். 

கல்வீச்சு

இதனிடையே விஜயகாந்த் பேசிக்கொண்டிருந்தபோது கூட்டத்தில் சிலர் எடப்பாடிக்கு ஆதரவாக குரல் கொடுத்து கோஷங்களை எழுப்பினர். மேலும் மேடையின் மீது கற்களை வீசினர். 

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து காவல்துறையினர் மர்ம நபர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். 

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!