அப்பாவை மிஞ்சிய மகன்! செய்தியாளர்களை தெறிக்கவிட்ட சின்ன கேப்டன்!

Published : Nov 15, 2018, 09:44 AM IST
அப்பாவை மிஞ்சிய மகன்! செய்தியாளர்களை தெறிக்கவிட்ட சின்ன கேப்டன்!

சுருக்கம்

 கேப்டன் விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பு என்றாலே காரசாரமாக இருக்கும் அதே போல அவரது மூத்த மகன் விஜயபிரபாகரன் செய்தியாளர் சந்திப்பும் அசத்தலாக முடிந்தது.

காஞ்சிபுரத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி தனது அரசியல் பயணத்தை விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் துவங்கினார். நலத்திட்ட உதவிகள் வழங்கிய மேடையில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேசிய பேச்சும் அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது. மேலும் பல தரப்பாலும் விஜயகாந்த் மகனின் பேச்சு பாராட்டப்பட்டது. ஆனால் அதன் பிறகு வேறு எந்த நிகழ்ச்சியிலும் விஜயகாந்த்மகன் பங்கேற்கவில்லை.

    இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறைக்கு வருகை தந்த விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரனுக்கு தே.மு.தி.க தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு அளித்தனர். விஜயகாந்தை போலவே திறந்த காரில் நின்ற படி தொண்டர்களின் வரவேற்பை விஜயபிரபாகரன் ஏற்றுக் கொண்டார். மேலும் தேவர் ஆட்டம் உள்ளிட்டவற்றை எல்லாம் ஏற்பாடு செய்து விஜயபிரபாகரன் நிகழ்ச்சியை தே.மு.தி.கவினரும் அமர்க்களப்படுத்தினர்.


  
   இதனைதொடர்ந்து விஜய பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்தார். வயதில் சிறியவர் அரசியலுக்கு புதிது என்று நினைத்து சில செய்தியாளர்கள் மிகவும் இயல்பாக விஜயபிரபாகரனிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு விஜயபிரபாகரன் அளித்த பதில் கேப்டனையே தூக்கி அடிக்கும் வகையில் இருந்தது. மணப்பாறை முருக்கு குறித்து கேள்வி எழுப்பிய போது, சிறிதும் தாமதிக்காமல் மணப்பாறை முருக்கு மணப்பாறையில் கிடைக்கிறது சென்னையிலும் கிடைக்கிறது.

   ஆனால் தமிழ்நாட்டில் வேறு எங்கும் மணப்பாறை முருக்கு கிடைப்பதில்லை. மணப்பாறை முருக்கை சரியான முறையில் மார்க்கெட்டி செய்தால் இந்தியா முழுமைக்கும் பிரபலப்படுத்த முடியும், மணப்பாறையில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று விஜயபிரபாகரன் பதில் அளிக்க செய்தியாளர்கள் சிறிது திக்கித் தான் போனார்கள். அதன் பிறகு தே.மு.தி.க குறித்து கேள்வி எழுப்பப்பட அனைத்து கேள்விகளுக்கும் கேப்டனை போலவே அதிரடியாக பதில் அளித்து அசர வைத்தார்.

   இடைத்தேர்தலில் தே.மு.தி.க போட்டியிடுவது குறித்து மேலிடம் முடிவு செய்யும் என்றும், வேட்பாளர்களுக்கு ஆதரவாக கேப்டன் பிரச்சாரம் செய் சொன்னால் தான் பிரச்சாரம் செய்ய தயாராக இருப்பதாகவும் விஜயபிரபாகரன் கூறிவிட்டு சென்றார்.

PREV
click me!

Recommended Stories

EVM எந்திரம் பிராடு இல்லை..! நான் 4 முறை வெற்றிபெற்றுள்ளேன்.. காங்கிரஸ் எம்.பி., சுப்பிரியா சுலே ஆதரவு
எடப்பாடிக்கு நன்றி சொன்ன புதிய பிஜேபி தலைவர்..! எகிரும், அதிமுக மவுசு