அரவக்குறிச்சியில் அதிமுக வெற்றிபெறுவது உறுதி… அடித்து கூறும் அமைச்சர்!

By vinoth kumar  |  First Published Nov 15, 2018, 9:42 AM IST

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வெற்றி பெறுவது உறுதி என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார். கடந்த சில நாட்களாக அமைச்சர் விஜயபாஸ்கர், செந்தில் பாலாஜி இடையே வார்த்தை போர் நிலவி வருகிறது. 


அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வெற்றி பெறுவது உறுதி என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார். கடந்த சில நாட்களாக அமைச்சர் விஜயபாஸ்கர், செந்தில் பாலாஜி இடையே வார்த்தை போர் நிலவி வருகிறது. 

இந்நிலையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் யார் என்று தனக்கு தெரியாது என ரஜினிகாந்த் கூறியுள்ளார். இந்த மாதிரி சப்ஜெக்ட்களுக்கு முதல்வர், துணை முதல்வர் பதில் அளிப்பார்கள். 

Tap to resize

Latest Videos

அரவக்குறிச்சி தேர்தல் பணிகள் சூடு பிடித்துள்ளது. எங்கள் நிர்வாகிகள் முழு மூச்சாக வேலை செய்கிறார்கள். அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. யார் வேட்பாளர் என்பதை முதல்வர், துணை முதல்வர் முடிவு செய்வார்கள் என்றார். 

அப்போது, உங்களை  அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிட தயாரா என செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, நடப்பதை பற்றி பேச சொல்லுங்கள். அவர் அமைச்சராக இருந்தபோது ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்தித்தாரா. தேர்தலில் யார் டெபாசிட் வாங்க போகிறார்கள் என்பது தேர்தல் முடிவில் தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

click me!