ரஜினியை சமாளிப்பது எப்படி? அறிவாலயத்தில் ஸ்டாலின் நடத்திய ரகசிய ஆலோசனை!

By sathish kFirst Published Nov 15, 2018, 9:09 AM IST
Highlights

 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக ரஜினி கட்சி துவங்கினால் பின்பற்ற வேண்டிய வியூகம் குறித்து மூத்த நிர்வாகிகளுடன் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.

கடந்த மாதம் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி கட்சி ஆரம்பிக்கும் பணி 90 சதவீதம் முடிந்துவிட்டதாக கூறியிருந்தார். மேலும் தினந்தோறும் கட்சி துவங்குவதற்கான பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருவதாக நேற்று (13-11-2018) தெரிவித்திருந்தார். அத்துடன் முன்பை விட தற்போது உற்சாகமாகவும் ரஜினி வலம் வருகிறார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது ரஜினி இருந்த ஸ்பீட் அவரிடம் ஏற்பட்ட மாற்றத்தை கட்டியம் கூறுவதாக இருந்தது.

போதாக்குறைக்கு புதுக்கட்சி துவங்குவது குறித்து ரஜினி ஜனவரி மாதத்தில் அறிவிப்பு வெளியிட வாய்ப்பு இருப்பதாக அவரது சகோதரர் சத்தியநாராயணா கூறி வருகிறார். ரஜினி அரசியலுக்கு வருவார் என்று கடந்த ஆண்டு முதன் முதலில் கூறியவரும் இவர் தான். இப்படி ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கான சூழல்கள் தென்படத் தொடங்கியுள்ள நிலையில் அவரை எதிர்ப்பதற்கான வியூகத்தையும் முக்கிய கட்சிகள் வகுக்க ஆரம்பித்துள்ளன.

அதிலும் ரஜினி அரசியலுக்கு வந்தால் தி.மு.கவுக்கு செல்ல வேண்டிய ஆட்சிக்கு எதிரான வாக்குகள் ரஜினி கட்சிக்கு செல்லவே வாய்ப்பு அதிகம் என்று பேசப்படுகிறது. எனவே அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் என்ன செய்வது என்று மு.க.ஸ்டாலின் அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார்.  அறிவாலயத்தில் இருந்த முக்கிய நிர்வாகிகளை திடீரென அழைத்த ஸ்டாலின் இது பற்றி மிக தீவிரமாக பேசியுள்ளார்.

டி.ஆர். பாலு மட்டுமே ரஜினியை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற வகையில் கருத்துகளை அப்போது தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. ரஜினி தற்போதைக்கு அரசியல் கட்சி துவங்கமாட்டார் என்று ஆ.ராசா அடித்து கூறியதாக கூறப்படுகிறது. துரை முருகனும் கூட நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி பா.ஜ.கவை ஆதரிக்க வாய்ப்பு இருக்கிறது என்று ஸ்டாலினிடம் சொன்னதாக சொல்லப்படுகிறது. இது தவிர நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி தி.மு.கவிற்கு எதிராக பிரச்சாரம் செய்தால் என்ன செய்வது? என்கிற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது.

எதற்கும் தயாராக இருக்கும் வகையில் கடந்த காலங்களில் ரஜினி பேசிய பேச்சுகள் அவரை டேமேஜ் செய்வதற்கு வசதியான தகவல்களை சேகரித்து வைப்பது என்கிற முடிவும் கூட எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. வழக்கத்திற்காக மாறாக ரஜினி அரசியல் கட்சி துவங்குவது குறித்த பேச்சு அறிவாலயத்தில் 2 மணி நேரத்திற்கு மேலாக சென்றதாக சொல்லப்படுகிறது.

click me!