சென்னைக்கு வட கிழக்கே மிக அருகில் கஜா… 100 கி.மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசும்… மாலை கரையை கடக்கிறது !! 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

By Selvanayagam PFirst Published Nov 15, 2018, 6:41 AM IST
Highlights

கஜா புயல் இன்று  கரையை கடக்க உள்ளதால் முன்னெச்சரிக்கை தஞ்சாவூர், கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்டங்களில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள கஜா புயல் மணிக்கு 12 கி.மீ., வேகத்தில் தமிழகத்தை நோக்கி நெருங்கி வருகிறது. இந்தப் புயல் இன்று மாலை பாம்பன் - கடலூர் இடையே கரையை கடக்கும் எனவும், இதனால் தமிழகம், புதுச்சேரியில் அதிக கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் நாகை, காரைக்கால் மாவட்டங்களில் இன்று  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல்  தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

கஜா புயல் காரணமாக இன்று மாலை 5 மணியிலிருந்து தனுஷ்கோடிக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாகவும், காற்றின் வேகத்தை பொறுத்து பாம்பன் பாலத்தில் போக்குவரத்துக்கு அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனவும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

புயல் காரணமாக திருவள்ளுவர், திருச்சி பாரதிதாசன், புதுச்சேரி, திருவாரூர் மத்திய பல்கலையில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை - ராமேஸ்வரம், மதுரை - ராமேஸ்வரம், மானாமதுரை - ராமேஸ்வரம் இடையிலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இதே போல்  கஜா புயல் காரணமாக தமிழகத்தில் இன்று  நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த  தேர்வுகள் நவம்பர் 24ம் தேதி நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

click me!