இப்போ கூட கலைஞர் என்னை விஜி விஜினு கூப்படற மாதிரி இருக்கு... கத்தி அழுத்த விஜயகாந்த்!

First Published Aug 8, 2018, 10:49 AM IST
Highlights

இப்போ கூட கலைஞர் என்னை விஜி விஜினு கூப்படற மாதிரி இருக்கு; குழந்தை போல பறிதவித்து அழுதுள்ளார் விஜய்காந்த் 

இப்போ கூட கலைஞர் என்னை விஜி விஜினு கூப்படற மாதிரி இருக்கு; குழந்தை போல பறிதவித்து அழும் விஜய்காந்த்;
தமிழுக்காகவே வாழ்ந்த தமிழ் தலைவர் கலைஞர் கருணாநிதி தனது 94வது வயதில் நேற்று காலமானார். அவரது பிரிவு தமிழகத்தையே பெருந்துயரில் ஆழ்த்தி இருக்கிறது. தமிழ் தாயின் முழு ஆதிக்கமும் தாண்டவமாடிய கலைஞரின் நாவில் இருந்து இனி அந்த செந்தமிழ் பேச்சுக்களை கேட்க முடியாதே என நினைக்கும் போது இதயம் கனக்கிறது.

அவரது பிரிவால் துடிதுடித்து போயிருக்கும் தமிழக மக்களும் திமுக தொண்டர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் அவரின் இழப்பிற்கு இரங்கல் செய்தி அறிவித்து வருகின்றனர்.

தேமுதிக தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் அமெரிக்காவில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். கலைஞர் காலமான செய்தி அறிந்து பதறிப்போன அவர் வீடியோவில் தன்னுடைய இரங்கல் செய்தியை கண்ணீருடன் தெரிவித்திருக்கிறா.

முத்தமிழறிஞர் Dr. கலைஞர் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், கட்சியினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/WeiuqmCzkF

— Vijayakant (@iVijayakant)
கலைஞர் 5 ஆண்டுகளாக தமிழகத்தை மிக திறமையாக ஆட்சி செய்த தலைவர். அவரது இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். என் மீது மிகுந்த பாசம் கொண்டவர். என்னை செல்லமாக விஜி விஜி என அழைப்பார். இன்றைக்கும் செல்லமாக அவர் என்னை விஜி விஜினு கூப்படறது தான் ஞாபாகத்துக்கு வருகிறது என நா தழுதழுக்க விஜயகாந்த் கூறியிருக்கிறார்.

கலைஞருக்கு தங்க பேனா கொடுக்க வாங்கி இருப்பதாகவும், இப்போது அதை எப்படி அவருக்கு கொடுப்பேன்? தங்க பேனா வைத்து நான் என்ன செய்ய என உருகிய விஜயகாந்த். கலைஞரின் பிரிவை சகிக்க இயலாமல் சிறு குழந்தையாக மாறி கதறி அழுகிறார். அவர் கலங்குவதை இந்த வீடியோவில் பார்க்கும் அனைவருக்குமே கண்களில் கண்ணீர் வந்துவிடும். அந்த அளவிற்கு அவரை பாதித்திருக்கிறது கலைஞரின் பிரிவு. தொடர்ந்து விஜகாந்தின் மனைவி பிரேமலதா தன் சர்பாகவும், தேமுதிக கட்சி சார்பாகவும் கலைஞரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோவில்.

click me!