விஜய பாஸ்கருக்கு 3 நாள் லீவு …அடுத்த கட்ட விசாரணக்கு கிடுக்கிப்பிடி கேள்விகளுடன் வருமான வரித்துறை அதிகாரிகள்…

First Published Apr 11, 2017, 6:32 AM IST
Highlights
vijaya baskar


விஜய பாஸ்கருக்கு 3 நாள் லீவு …அடுத்த கட்ட விசாரணக்கு கிடுக்கிப்பிடி கேள்விகளுடன் வருமான வரித்துறை அதிகாரிகள்…

அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் இருந்தது வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியது தொடர்பாக அவரிடம் வருமான வரித்துறை நேற்று விசாரணை நடத்தியது.அடுத்த கட்ட விசாரணைக்கு முன் 3 நாட்கள் விடுமுறை வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டதையடுத்து, அவருக்கு லீவு அளிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு மிகப்பெரிய அளவில் பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அ.தி.மு.க. அம்மா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்கு நெருக்கமாக செயல்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீடு, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கீதா லட்சுமி வீடு உள்ளிட்ட 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின. 



இதையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், டாக்டர் கீதாலட்சுமி ஆகியோர் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி வருமான வரித்துறை புலனாய்வு பிரிவில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். 



சோதனையின்போது சிக்கிய ஆவணங்கள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டியிருப்பதால் தொடர்ந்து ஆஜராகும்படி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் வருமான வரித்துறை விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து 3 நாட்களுக்கு தனக்கு விலக்கு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அவரது கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள், விசரணைக்கு ஆஜராவதில் இருந்து அவருக்கு 3 நாட்கள் விலக்கு அளித்தனர். மூன்று நாட்களுக்குப் பிறகு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும்அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

 அதேசமயம், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரிடம் தொடர்ந்து 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் விசாரணை நிறைவுற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

,

click me!