
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலவலகம் உள்ளிட்ட 5௦ கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 7 ஆம் தேதியன்று வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து 9 ஆம் தேதி வருமானவரித்துறை அதிகாரியின் முன் ஆஜாராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து புதுக்கோட்டையில் உள்ள கல்குவாரி மற்றும் விஜயபாஸ்கரின் நண்பர்கள் வீட்டிலும் மத்திய பொதுப்பணி துறை அதிகாரிகள் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய பாஸ்கரிடமிருந்து பல்லாயிரக்கோடி கணக்கில் , ஏராளமான ஆவணங்கள் சிக்கி உள்ளது.இது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து வருமான வரி மற்றும் அமலாக்க பிரிவு சிபிஐ அதிகாரிகள் விஜய பாஸ்கர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆயிரம் விளக்கில் உள்ள அலுவலகத்தில் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்
விஜய பாஸ்கரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் சரி பார்க்கும் பணி தற்போது மூத்த அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து அமைச்சர் விஜய பாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய சிபிஐ தரப்பில் முடிவு செய்துள்ளனர் .
அமைச்சர் விஜய பாஸ்கர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதால், அவர் எந்த நேரத்திலும் கைதாவர் என எதிர்பார்க்கப்படுகிறது