
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து கடந்த 7-ஆம் தேதி தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, ராதிகா சரத்குமார் ஆகியோரது வீடு மற்றும் அதிரடி ரெய்டு நடத்தினர்.
அந்த சோதனையில் முக்கிய ஆவணங்களும் ரூ.89 கோடி ருபாய் வாக்காளர்களுக்கு கொடுக்க தயார் செய்யப்பட்ட லிஸ்டும் கிடைத்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல அமைச்சர்களின் பெயர்களும் இடம்பெற்று இருந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்த மேற்கண்ட மூவருடன் சேர்த்து முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரனுக்கும் சென்னை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
பின்னர், விஜய பாஸ்கர் மற்றும் நடிகர் சரத்குமார், நுங்கம்பாக்கத்தில் உள்ள , வருமான வரித்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று விளக்கம் அளித்தனர் . ஆனால் துணை வேந்தர் கீதா லட்சுமி நேரில் ஆஜராகாமல், இதற்கு எதிராக நேரில் ஆஜராகுவதற்கு விலக்கு அளிக்கும் படி மனு அளித்தார் .
நேற்று நடைப்பெற்ற விசாரணையின் முடிவில், வருமானவரித்துறை சார்பில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற சம்மனை எதிர்த்து தொடரப் பட்ட இந்த மனு அதிரடியாக தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரிகள் முன்பு இன்று கீதா லட்சுமி ஆஜரானார் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இன்று நடைபெறும் விசாரணையில் மறைக்கப்பட்ட பல ரகசியங்களும் தெரிவிக்கக்கூடும் என்பதால் விஜயபாஸ்கருக்கு பிடி மேலும் இருகுகிறது.
இதுமட்டுமல்ல ஏற்கனவே விஜயபாஸ்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அமைச்சர்களும் சில எம்.எல்.ஏக்களும் சிக்கியுள்ளனர். இதனையடுத்து கீதாலட்சுமியும், விஜயபாஸ்கரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் எதையெல்லாம் உளறி கொட்டுவாரோ என்ற பீதியில் உள்ளார்களாம் சில அமைச்சர்கள்.