’உன் கட்சிக்காரன் உயிரைக் கொடுப்பானா..? பச்சை குத்துவானா..?’ சீமானுக்கு சவால் விட்ட விஜயின் குட்டி ரசிகன்: வீடியோ

By Thiraviaraj RMFirst Published Jan 9, 2019, 7:31 PM IST
Highlights

சீமான் சமீபத்தில் விஜய்யை தாக்கி பேசிய வீடியோவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரது ரசிகர்கள் பல வீடியோக்களை பகிர்ந்திருந்தாலும் விஜய் ரசிகனான ஒரு சிறுவன் சீமானை பங்கமாக கலாய்த்து சவால் விட்டுள்ள வீடியோ தான் இப்போதைய ஹைலட். 

சீமான் சமீபத்தில் விஜய்யை தாக்கி பேசிய வீடியோவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரது ரசிகர்கள் பல வீடியோக்களை பகிர்ந்திருந்தாலும் விஜய் ரசிகனான ஒரு சிறுவன் சீமானை பங்கமாக கலாய்த்து சவால் விட்டுள்ள வீடியோ தான் இப்போதைய ஹைலட். 

கடந்த ஓரிடு நாட்களுக்கு முன் ஒரு விழாவில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ’’என் தம்பி ஒருத்தன் இருக்கான் விஜய். சர்கார் படத்தில் பேசினால் ஆமாம் பேசினேன் என்று சொல்லணும்ல. அம்மா ஜெயலலிதா அவர்கள் மீது நான் பற்று கொண்டவன். முதல்வர் அவர்களை...டேய் உண்மையிலேயே நீ என் தம்பியா? எடப்பாடி பழனிசாமிக்கு எல்லாமாடா பயப்படுவது?. உன் மீது பெரிய மரியாதை வைத்திருந்தேனடா. ஐயா, முதல்வர் அவர்களை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். என்ன ஒரு நேரம் கேடு கெட்ட நேரம். அவரை போய் சந்திச்சு. அவரே ஒரு அடிமை. இதில் ஒரு விரல் புரட்சியாம், ஒரு விரல் புரட்சி.

என்னத்த புரட்சி, வறட்சின்னு. என் படத்தில் நடிக்க மாட்டாரு. ஆனால் நான் பேசுவதை எல்லாம் பேசி நடிப்பாரு. என்ன பண்ணுவது, தம்பியாக போயிட்டாரு. சிம்பு தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் இனிமேல் என் தம்பி சிலம்பரசன் தான். அவனை வைத்து மூன்று படம் எடுப்பது என்று முடிவு எடுத்துள்ளேன். அதோட பல பேர் நெஞ்சு வெடிச்சு செத்துடுவான். கொன்னு எடுத்துறதுன்னு இரண்டு பேரும் முடிவு எடுத்திருக்கிறோம். சிம்பு தான் ரியல் சூப்பர் ஸ்டார். எல்லோரிடமும் கதையை சொன்னேன் பயந்துட்டான். ஒரேயொருத்தன் நான் நடிக்கிறேன் அண்ணா என்றான். என் தம்பி தான் சொன்னான். ஏன் சொன்னான், தமிழன். தீபாவளிக்கு கொண்டு வர்றேன் உடன்பிறப்பு படம். இதென்ன பேச்சு படம் ரொம்ப பேசும்’’ என விஜய் ரசிகர்களை வம்பிற்கிழுத்து இருந்தார். 

சீமான் தாக்கப்பட்டார் 😂 pic.twitter.com/abc3hATxvM

— அனிதா ♡ (@anithatalks)

 

விஜயை பற்றி சீமான் பேசிய பேச்சுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஜய்யை பல மேடைகளில் என் தம்பி என்று உரிமையோடு அழத்தவர். இதற்கு விஜய் ரசிகர்கள் தேவையில்லாமல் மிக மோசமான வார்த்தைகளால் சீமானை திட்டி ட்ரெண்ட் செய்தது அனைவரும் அறிந்ததே. சீமானின் பேச்சிற்கு பதிலடி தரும் வகையில் விஜய் ரசிகரான ஒரு சிறுவன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளான். அதில், சீமான் எங்க தளபதியை பற்றி தெரியாமல் பேசிட்ட.. தளபதின்னா எங்க உயிரு... அவருக்காக எங்க உயிரையே கொடுப்போம். எங்கே.. உன் கட்சிக்காரன் எவனாவது உயிரைக் கொடுப்பானா..? தளபதினு பச்சை குத்திருக்கேன்.. உன் கட்சிக்காரன் எவனாவது சீமான்னு பச்சை குத்திருக்கானா?’ என மிடுக்குத்தனத்துடன் அந்த சிறுவன் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

click me!