
கோலிவுட் வட்டாரத்தில், ‘கட்சி ஆரம்பிக்கப்போகிறார்!’ எனும் பேச்சில் இன்னும் சிக்காதவர்கள் தம்ன்னாவும், யோகிபாபுவும்தான்! என்று கலாய்ப்பு கமெண்டே அடிக்குமளவுக்கு நிலைமை போய்க் கொண்டிருக்கிறது.
கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து டாப்கியரில் செயல்பட துவங்கிவிட்டார், ரஜினியோ புது கட்சிக்கு பூஜை போடும் வேலைகளில் இறங்கிவிட்டார், விஷாலோ ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்கிறார், சிம்புவோ காவிரிக்கு பேட்டி தட்டுகிறார்! பியூஸ் மானுஷுடன் போய் மேட்டூர் குளத்தில் ஆய்வு செய்கிறார் சிம்பு, ட்விட்டரில் தீப்பிடிக்கும் கமெண்டுகளை தட்டிவிட்டு தகர அடி அடிக்கிறார் அர்விந்த்சாமி. இப்படி கோலிவுட் நடிகர்கள் ஆளாளுக்கு அரசியல் பித்து பிடித்து திரிகிறார்கள்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே தங்கள் தலைவர் அரசியலுக்கு வந்தே தீருவார்! என்று ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் நடிகர் விஜய்யின் ரசிகர்கள். சில வருடங்களுக்கு முன் தி.மு.க.வுடன் உரசல் நேர்ந்ததால் அக்கட்சிக்கு எதிராக தன் ரசிகர்களை தேர்தலில் பயன்படுத்தினார் விஜய், பின் அ.தி.மு.க.வுடன் உரசல் நேர்ந்ததால் அக்கட்சிக்கு எதிராக் ரசிகர்களை திருப்பிவிட்டார் விஜய்.
இப்படி அங்கேயும் இங்கேயுமாக தேர்தலுக்கு தேர்தல் மாறி மாறி ஓடிக் கொண்டிருக்கும் நாம எப்போ அரசியல் அவதாரம் பூசுறது, எப்போ நம்ம தளபதியை ‘தலைவரே’ன்னு அழைக்கிறது? என்று அவரது ரசிகர்கள் பொங்கிப் புழுங்க துவங்கிவிட்டனர். இந்நிலையில் வரும் ஜூன் மாதம் விஜய் புதுக்கட்சி துவங்கப்போகிறார், அவரது பிறந்த நாளில் அக்கட்சி உதயம் என்று சமீபத்தில் ஒரு பரபரப்பு எழுந்தது.
ஆனால் விஜய்யின் ‘மக்கள் நற்பணி இயக்கம்’ தரப்பிலிருந்து எந்த சமிங்கையும் இல்லை. இது ரசிகர்களை நோகடித்துவிட்டது.இந்த ஆதங்கத்தை விஜய்யின் அப்பாவான எஸ்.ஏ.சந்திரசேகரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டனர்.அதற்கு அவரோ ‘தமிழகத்துல அரசியல் சூழ்நிலை எப்படி குழம்பிக்கிடக்குதுன்னு நான் சொல்லி நீங்க தெரிஞ்சுக்க வேண்டியதில்லை. நடிகர்கள் கட்சி துவக்குறதாலே களேபரப்பட்டு கிடக்குது. சில நேரங்கள்ள மக்கள் அதிருப்தியாகுறாங்க இந்த கூத்துக்களால். இந்த நிலையில உங்க தளபதியும் (விஜய்) கட்சி ஆரம்பிச்சா, மக்களுக்கே போராகிடும்.
அதனால கொஞ்சம் நாள் கவனிப்போம், அப்புறம் களமிறங்குவோம்!” என்று சொல்லியிருக்கிறார்.சந்திரசேகரர் இப்படி சொன்னது, இயக்க நிர்வாகிகள் மூலம் விஜய்யின் காதுகளுக்குப் போக ‘என்ன இவரு இப்படியெல்லம பேசுறார்? என்னோட அரசியல் மக்களுக்கு போராவா இருக்கும்?அப்பாவே இப்படி பேசுனா என்ன அர்த்தம்?” என்று ஷாக்காகிவிட்டாராம்.