அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு மாவுக்கட்டு... மிரட்டல் விடுத்த விஜய் ரசிகர்..!

Published : Oct 28, 2019, 05:29 PM IST
அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு மாவுக்கட்டு...  மிரட்டல் விடுத்த விஜய் ரசிகர்..!

சுருக்கம்

சிறப்பு காட்சி ஒளிபரப்பு செய்யபடாமல் இருந்திருந்தால், கடம்பூர் ராஜு வந்து புத்தூர் கட்டு, மாவு கட்டு எல்லாம் போட்டுக்கிட்டு வீட்டில் உக்காந்து கொண்டிருப்பார் என்று கூறியுள்ளார். 

பிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதிக்கப்படவில்லை என்றால் கடம்பூர் ராஜூ புத்தூர் கட்டு, மாவுக்கட்டு போட்டுக் கொண்டு வீட்டில் உட்கார்ந்திருப்பார் என விஜய் ரசிகர் மிரட்டல் விடுத்துள்ளார். 

பிகில் திரைப்படம் கடந்த 25-ம் தேதி வெளியானது. முன்னதாக, நள்ளிரவு மற்றும் அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு டிக்கெட் விலை 1000 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது என்ற புகாரை அடுத்து சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை. விதியை மீறி சிறப்பு காட்சி ஒலிபரப்பு செய்தால் திரையரங்குகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், பிகில் படத்தை பார்க்க வந்த ஒருவரிடம் பேட்டி எடுக்கையில், தடை செய்தவன் பெயர் என்ன..? சிறப்பு காட்சி ஒளிபரப்பு செய்யபடாமல் இருந்திருந்தால், கடம்பூர் ராஜு வந்து புத்தூர் கட்டு, மாவு கட்டு எல்லாம் போட்டுக்கிட்டு வீட்டில் உக்காந்து கொண்டிருப்பார் என்று கூறியுள்ளார். இந்த காணொளி வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றது.

 

PREV
click me!

Recommended Stories

முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!