அமித்ஷாவை அல்லு தெறிக்கவிட்ட உளவுத்துறை ரிப்போர்ட்... விஜயகாந்த் திமுக பக்கம் போனால் 40ம் போயிடும்!! 20 தொகுதிகளில் டெபாசிட் காலி...

By sathish kFirst Published Mar 4, 2019, 3:21 PM IST
Highlights

தேமுதிக தற்போது அதிமுக திமுக என மாறி மாறி கூட்டணி பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்தபடியே இருக்க, உளவுத்துறை அட்வைஸ் படி, தேமுதிக மட்டும் திமுக பக்கம் போனால் படுதோல்வியை சந்திக்கும் சூழல் ஏற்படுமாம்.

விஜயகாந்த் அமெரிக்காவிலிருந்த சமயத்தில் பிஜேபி அதிமுக தரப்பில் கூட்டணி பேச்சு வார்த்தையில் இழுபறி நீடிக்க, அமெரிக்கவிலிருந்து திரும்பிய விஜயகாந்தை  திருநாவுக்கரசர், பிப்ரவரி 22 அன்று ரஜினி, மு.க.ஸ்டாலின் ஆகியோரும் சந்தித்தனர். இந்த சந்திப்பிற்குப் பின் கூட்டணி மேட்டர் சூடுபிடிக்கத் தொடங்கியது.

அதிமுகவுடன் பேசுவதைப் போலவே, திமுக உடனும், தேமுதிக தொடர்ந்து கூட்டணி பேச்சு நடத்தி வருகிறது. அதிமுகவில், 'பாமகவை விட, கூடுதலாக ஒரு தொகுதி வேண்டும்' என, விஜயகாந்தின் மைத்துனர், சுதீஷ் பிடிவாதமாக உள்ளார். இதை, அதிமுக தலைமை ஏற்கவில்லை. கடைசியாக, 5 தொகுதிகள் ஒதுக்க, அதிமுக முன்வந்துள்ளது.

இந்நிலையில், 5 லோக்சபா தொகுதிகளை ஏற்கத் தயார், அத்துடன், இடைத்தேர்தல் நடக்கவுள்ள சட்டசபை தொகுதிகளில், ஆம்பூர், சோளிங்கர், குடியாத்தம், ஓசூர் ஆகிய நான்கில், ஏதாவது இரண்டு தொகுதிகளை தரவேண்டும்' என, தேமுதிக புதிய நிபந்தனை விதித்துள்ளது. 

பாமகவுக்கு ஒதுக்கிய தொகுதிகளுக்கு இணையான இடம் பெறும் வகையில், இந்த நிபந்தனையை, தேமுதிக வைத்துள்ளது. இரு சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற்றால், சட்டசபையில், அரசின் மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தால், பெரிய அளவில் காய்நகர்த்தலாம் என்றும், தேமுதிக கருதுகிறது. ஆனால், சட்டசபை தொகுதிகளை ஒதுக்குவதில், அதிமுகவிற்கு உடன்பாடில்லை.

இப்படி தேமுதிக, அதிமுக திமுக என மாறி மாறி கூட்டணி பேச்சு வார்த்தையில்  இழுபறி நீடித்தபடியே இருக்க, உளவுத்துறை அட்வைஸ் படி பிஜேபி தீவிரமாக களமிறங்கியது.  பிஜேபி தேசிய தலைவர் அமித்ஷா, திமுக பக்கம் தேமுதிக போகக்கூடாது. விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ், பிரேமலதா தரப்பில் என்ன கோரிக்கையாக இருந்தாலும் நிறைவேற்ற முயற்சியுங்கள்'' என ஸ்ட்ரிக்ட்டான அட்வைஸை எடப்பாடி தரப்புக்கு தந்திருக்கிறார். 

இதையடுத்து, உடனடியாக முடிவை தெரிவியுங்கள் என அ.தி.மு.க. தரப்பிலிருந்து தேமுதிகவுக்குத் தெரிவிக்கப்பட்டது. 3 சீட்டுக்கு மேல் உயர்த்தித் தர அதிமுக தயாராக இல்லை. மற்ற பிரச்சினைகளை சரி செய்யலாம் என்பதே அதிமுகவின் நிலை. பிஜேபியின் அட்வைஸ்படி எடப்பாடியின் இறுதிக்கட்ட  கூட்டணி டீலிங் வேகமெடுத்துள்ளதாம்.

சரி அந்த ரிப்போர்ட்டில் அதிரவைக்கும் அளவிற்கு என்ன சொல்கிறது? விஜயகாந்த் ஒருவேளை திமுக பக்கம் போனால், 40 தொகுதியையும் திமுக கூட்டணிக்கு பறிகொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுத்திவிடுமாம், அதுமட்டுமல்ல சுமார் 20 தொகுதிகளில் டெபாசிட் பறிபோகும் அபாயம் உள்ளதாம். இதனால் தேமுதிகவை இழக்க கூடாது என நினைக்கிறதாம் பிஜேபி.

click me!