அம்மா உணவகத்தில் இனி காசே கொடுக்க வேண்டாம்... ஜெயலலிதாவை மிஞ்சிய எடப்பாடி..!

By vinoth kumar  |  First Published Mar 4, 2019, 2:54 PM IST

அம்மா உணவகங்களில் கட்டுமான தொழிலாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தனியாக ஓட்டல்களில் இருந்து சிறப்பு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அம்மா உணவகங்களில் இட்லி ஒன்று 1 ரூபாய்க்கும், பொங்கல், சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கருவேப்பிலை சாதம் ஆகியவை 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் ஒரு செட் சப்பாத்தி 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே விலையிலேயே தொடர்ந்து உணவுகள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு அம்மா உணவங்களில் விலையில்லா உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் தொடங்கி வைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொழிலாளர்களுக்கு உணவை பரிமாறினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயகுமார், வேலுமணி, நிலோபர் கபில், விஜயபாஸ்கர், உதயகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இந்நிலையில், கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவசமாக உணவு வழங்குவதன் மூலம் 21 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவர். சென்னை மாநகராட்சியில் உள்ள 407 அம்மா உணவகங்கள் மற்றும் தமிழகத்தின் 11 மாநகராட்சிகள் மற்றும் 125 நகராட்சிகளில் உள்ள 251 அம்மா உணவகங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!