
திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு வெப்ப சலனம் காரணமாக புத்தி பேதலித்து விட்டது என்றும் செயற்கையாக போராட்டங்களை தூண்டிவிடுகிறார் என்றும் துணை சபாநாயகர் பொள்ளாட்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் எடப்பாடிக்கு எதிராக 19 பேர் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர். இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தினகரன் தரப்பும் ஸ்டாலின் தரப்பும் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், செய்தியாளரகளை சந்தித்த துணை சபாநாயகர் பொள்ளாட்சி ஜெயராமன், ஸ்டாலினுக்கு மூளை வெப்பசலனம் ஏற்பட்டுவிட்டது என்றும், 96 எம்.எல்.ஏக்களைக் கொண்டு மைனாரிட்டி ஆட்சி செய்தது திமுக எனவும், தெரிவித்தார்.
அப்படிப்பட்ட மைனாரிட்டி திமுக ஆட்சியில் பல அசம்பாவிதங்கள் நடந்ததாகவும், ஆனால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், தமிழகத்தில் அமைதியாக நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
செயற்கையாக போராட்டங்களை ஸ்டாலின் தூண்டிவிடுவதாகவும், அவருக்கு முதலமைச்சர் பதவி கனவாகவே போய்விடும் எனவும் தெரிவித்தார்.
திமுகவின் தலைவராக முடியாதவர்தான் ஸ்டாலின் எனவும், முதலமைச்சர் எடப்பாடிக்கு 134 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
அதிமுக விவகாரத்தில் ஸ்டாலின் மூக்கை நுழைக்க கூடாது எனவும், ஆட்சிக்கு இடையூறு வந்தால் ஜக்கையன் வந்ததுபோல அனைத்து எம்எல்ஏக்களும் வந்து விடுவார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும், தேவை படும்போது சட்டப்பேரவை கூட்டப்படும் எனவும் பொள்ளாட்சி ஜெயராமன் தெரிவித்தார்.