விவசாயியாக மாறிய எடப்பாடி பழனிச்சாமி... ட்விட்டரில் போட்டு பெருமைப்படுத்திய துணை ஜனாதிபதி!

By Asianet TamilFirst Published Jan 20, 2020, 8:07 AM IST
Highlights

“தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. தன்னுடைய  ஆதார தொழிலான விவசாயத்தை அவர் மறக்காமல் இருப்பது பாராட்டுக்குரியது. முதல்வர் பழனிசாமி மக்களுக்கு ஊக்கம் அளிக்கிறார். விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

 தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஒரு விவசாயியாக வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக இருப்பதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையைக் கொண்டாட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொந்த ஊர் சென்றிருந்தார். அங்குள்ள மக்களுடன் இணைந்து பொங்கல் விழாவை கொண்டாடினார். அப்போது அவருடைய கிராமமான சிலுவம்பாளையத்தில் வயல்வெளியில் வைத்து தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்தார். பேட்டியின்போது வயலில் இறங்கி விவசாய வேலைகளை செய்ததோடு, விவசாயம் தொடர்பான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். இந்தப் புகைப்படங்கள் சமூக ஊடங்களில் வெளியானது.


இந்நிலையில் விவசாய வேலைகளை செய்த எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வெங்கையா நாயுடு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதில், “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. தன்னுடைய  ஆதார தொழிலான விவசாயத்தை அவர் மறக்காமல் இருப்பது பாராட்டுக்குரியது. முதல்வர் பழனிசாமி மக்களுக்கு ஊக்கம் அளிக்கிறார். விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

click me!