அன்புமணியை தோற்கடிக்க வரும் வன்னியர்கள் டீம்... போட்டியிடப் போறது யார் தெரியுமா?

By sathish kFirst Published Feb 17, 2019, 7:36 PM IST
Highlights

வன்னியர்கள் வாக்கு வங்கியை நம்பியே இதுவரை கூட்டணியும் தேர்தலையும் சந்தித்து வந்த பாமக இனி எப்படி சமாளிக்கப்போகிறது? அன்புமணிக்கு தலைவலியாக மாற இருக்கும் விஜிகே மணியை சமாளிக்கவே ஒரு டீம் அமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது பாமக.

வன்னியர்சங்க தலைவராக இருந்த குருவை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த வன்னியர்களை தன்வசம் வைத்திருந்த, ராமதாஸ், ஆனால் இப்போது குருவிற்கு பக்கபலமாக இருந்த வன்னிய இளைஞர்களை மொத்தமாக வளைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் காடுவெட்டி குருவின் உறவினரான விஜிகே மணி. 

வன்னியர் சங்கத் தலைவராக இருந்த, மறைந்த, காடுவெட்டி குரு பெயரில், 'மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்கம்' சேலத்தில், நேற்று புதிதாக துவக்கப்பட்டது. அதன் மாநில ஒருங்கிணைப்பாளர், குருவின் மூத்த சகோதரி மகனான விஜிகே மணி, செய்தியாளர்களை சந்திக்கையில்; தமிழகத்தில், ஒட்டுமொத்த வன்னியரை ஒருங்கிணைக்க, புது சங்கம் தொடங்கியுள்ளோம். 

எதிர்காலத்தில், வன்னியர் சங்கம் இருக்கக்கூடாது எனக் கருதும் அன்புமணி, பாமக, பெயரை மாற்றவும் தயங்க மாட்டார் என்ற அவரது நிலைப்பாட்டால், வன்னியர் சங்கத்தை துவங்கிஉள்ளோம். திமுக, - அதிமுக, கட்சிகளுடன் எப்போதும் கூட்டணி சேரமாட்டோம் என, சத்தியம் செய்து, அதை பத்திரத்தில் எழுதி தருவதாக ராமதாஸ், கூறினார். 

அவரது மகன் அன்புமணி, வன்னியர் நல வாரியம், அதற்கு சொந்தமான, சொத்துகளை அபகரிக்கவே, தற்போது, அதிமுகவுடன் கூட்டணி பேச்சு நடத்தி வருகின்றனர். அதற்கான வேலையை, முன்னாள் அமைச்சர், கே.பி.முனுசாமி செய்து முடித்து விட்டார். 

இதனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில், குருவின் தாய் கல்யாணியை போட்டியிட வைத்து, அன்புமணியை தோற்கடிப்பதே எங்கள் லட்சியம். புதிய சங்கத்தால், விரைவில், பாமக, காணாமல் போகும். நாடகமாடும் தந்தை - மகனால், வன்னியர்களை ஏமாற்ற முடியாது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

click me!