பயங்கர சத்தத்துடன் வெடித்த கேஸ் சிலிண்டர் விபத்தில் 10 பேர் உயிரிழப்பு...!! உறங்கிக்கொண்டிருந்தபோது நேர்ந்த துயரம்...!!

Published : Oct 14, 2019, 04:50 PM IST
பயங்கர சத்தத்துடன் வெடித்த கேஸ் சிலிண்டர் விபத்தில் 10 பேர் உயிரிழப்பு...!! உறங்கிக்கொண்டிருந்தபோது நேர்ந்த துயரம்...!!

சுருக்கம்

இரண்டு அடுக்குமாடி கொண்ட வீட்டில் இன்று காலை 10 க்கும் மேற்பட்டோர் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த சமையல் எரிவாயு சிலிண்டரில் இருந்து கேஸ்கசிவு ஏற்பட்டு தீடீரென அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது, அதில்  வீட்டின் சுற்றுச்சுவர் மற்றும் மேற்கூரை இடிந்து தரைமட்டமானது. அதில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 10க்கும் மேற்பட்டோர்  இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

சிலிண்டர் வெடித்த விபத்தில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பத்து பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது 

உத்திரபிரதேசம் மாநிலம், மாவ் மாவட்டத்தில்தான் இந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.  இங்குள்ள முஹமதாபாத் பகுதியில் உள்ள இரண்டு அடுக்குமாடி கொண்ட வீட்டில் இன்று காலை 10 க்கும் மேற்பட்டோர் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த சமையல் எரிவாயு சிலிண்டரில் இருந்து கேஸ்கசிவு ஏற்பட்டு தீடீரென அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது, அதில்  வீட்டின் சுற்றுச்சுவர் மற்றும் மேற்கூரை இடிந்து தரைமட்டமானது. அதில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 10க்கும் மேற்பட்டோர்  இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். சுமார் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அதிக சத்தத்துடன் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் அலறி அடித்து ஓடிவந்த அப்பகுதி மக்கள். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு  ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதிகாலை நடந்த இந்த கோர விபத்து  உத்திர பிரதேச மாநிலத்தில் பேரதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதி முழுவதும் சோகமாக காட்சி அளிக்கிறது. விபத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த  தீயணைப்பு படை வீரர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இன்னும் வேறுயாராவது இடிபாடுகளில் சிக்கி உள்ளனரா என கட்டிடத்தின் இடிபாடுகளில் தேடி வருகின்றனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த விபத்து குறித்து  அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்  உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளதுடன். அதில் காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பாஜக வெற்றி..! மதச்சார்பின்மையை நம்புபவர்களுக்கு கவலை அளிக்கிறது.. பினராயி விஜயன் கடும் வேதனை..!
தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்