மாணவர்களே தாய்மொழியில் பேசுங்கப்பா !!  குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அட்வைஸ் !!!

 
Published : Nov 24, 2017, 08:13 AM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
மாணவர்களே தாய்மொழியில் பேசுங்கப்பா !!  குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அட்வைஸ் !!!

சுருக்கம்

venkaiya naidu speech in a function

மாணவர்கள் தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், ஆனால் பேசும்போது தாய் மொழியில்தான பேச வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார்  பல்கலைக்கழக சிறப்பு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில்  குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொறியியல், மருத்துவம், தொழில்நுட்ப புலம், அறிவியல், உடல்நிலை அறிவியல் ஆகிய துறைகளில் 6 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு பட்டயங்கள், இளநிலை பட்டம், முதுநிலை பட்டம், ஆராய்ச்சி பட்டம் ஆகியவற்றை வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது , கல்விக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்து வருகிறது என்றும் . அனைத்துதரப்பினரும் உயர்கல்வியை பெறவேண்டும் என்பது தான் மத்திய அரசின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் உயர் கல்வியில் சேர்ந்து படிக்கும் மாணவ-மாணவிகள் 45 சதவீதம். பொதுவாகவே இந்தியாவில் அன்று முதல் இன்று வரை பெண்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனைவரும் தாய்மொழியை நன்றாக படியுங்கள். அதன் பிறகு எந்த மொழி தேவையோ அதை கற்றுக்கொள்ளுங்கள். இந்தி எதிர்ப்பின் போது நான் மாணவராக இருந்தேன். கடின உழைப்பால் இந்த நிலைக்கு வந்துள்ளேன் என கூறினார்.

இந்தியா முழுவதும் பணியாற்ற விரும்பினால் இந்தியை கற்றுக்கொள்ளுங்கள். உலக நாடுகளில் பணியாற்ற விரும்பினால் ஆங்கில மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறிய வெங்கய்யா நாயுடு ஆனால் பேசும்போது தாய் மொழியில் பேசுங்கள் என குறிப்பிட்டார்.

 

 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!