
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வரும் டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெற வாய்ப்புள்ளதா தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிடும்ட என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்று, மீண்டும் முதலமைச்சர் பதவியை தக்க வைக்க உதவியது ஆர்.கே.நகர் தொகுதி. அவர் கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார்
.இதையடுத்து கடந்த மார்ச் மாதம் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.. ஆனால் பணப்பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரை அடுத்து, தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு ஓராண்டாகியும், தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
மேலும் அதிமுகவின் இரு அணிகளும் கட்சியும், இரட்டை இலை சின்னமும் தங்களுக்த்தான் என தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டன. இது தொடர்பான விசாரணை முடிந்து நேற்று இபிஎஸ் –ஓபிஎஸ் அணிக்கே இரட்டை இலை என தீர்ப்பளித்தது.
இந்த சூழலில் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் குறித்து டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திடம் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதையடுத்து வரும் டிசம்பர் 14ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இன்று தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிடுகிறது.