அதிமுகவுக்கு இரட்டை இலை வழங்கப்பட்டது மகிழ்ச்சியே - யார் சொல்கிறார் தெரியுமா?

 
Published : Nov 23, 2017, 07:45 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
அதிமுகவுக்கு இரட்டை இலை வழங்கப்பட்டது மகிழ்ச்சியே - யார் சொல்கிறார் தெரியுமா?

சுருக்கம்

The leader of the state BJP Tamilnadu Souyirirajan said that the twin leaf symbol has been given to the AIADMK.

இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் உள்ளாட்சி தேர்தலை அரசு நடத்த முன்வர வேண்டும் எனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். 

இரட்டை இலை சின்னம் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. காரணம் அதிமுக இரு அணியாக பிரிந்தது. 

இதையடுத்து தன்னோடு ஒத்துழைக்காத டிடிவியை கழட்டிவிட்டு ஒபிஎஸ்சை சமாதானத்திற்கு அழைத்தார். அதன்படி தற்போது, இரட்டை இலை சின்னம் மீண்டும் எடப்பாடி பன்னீர் தரப்புக்கு கிடைத்துள்ளது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பாஜகவின் தயவால் தான் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளதாகவும் பின்னாளில் அதிமுக பிஜேபியுடன் இணையும் எனவும் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் உள்ளாட்சி தேர்தலை அரசு நடத்த முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார். 

திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சிக்காக பேசுகிறாரா அல்லது அதிமுகவுக்காக பேசுகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி சேரும் என்பதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் குறிப்பிட்டார். 
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!