
சென்னையில் இன்று திருமங்கலத்தில் இருந்து எழும்பூர் அருகே நேரு பூங்கா வரை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. அதில், கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு சென்னை வந்தார்.
முன்னதாக பாஜக தலைமை அலுவலகமான தி.நகரில் உள்ள கமலாயலத்தில் கட்சி முக்கிய நிர்வாகிகள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட பலருடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களை சந்திக்க இருக்கிறேன். மாநில அரசுக்கு தேவையான நிதிகளை மத்திய அரசு அளித்து வருகிறது. மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு வளர்ச்சி திட்டங்களை மேற்கொண்டுள்ளது. லஞ்சம், ஊழல் இல்லாமல் 3 ஆண்டுகளை பா.ஜ.க. சிறப்புடன் செயல்பட்டு கடந்துவிட்டது.
பாஜகாவின் கைப்பாவையாக அதிமுக இருக்கிறது என திமுக உள்ளிட்ட கட்சிகள் கூறுகின்றன. அது சுத்த பொய். அதிமுகவின் கட்சி விவகாரங்களில் பா.ஜ.க. தலை தலையிடாது.
தமிழகத்தின் மீனவர்கள் பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசு சிறப்பான பா.ஜ.க.வின் கைப்பாவையாக அதிமுக இருந்து வருவதாக கூறி திமுக தரம் தாழ்ந்த அரசியல் செய்து வருகிறது. மத்தியில் காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த போது திமுக என்ன காங்சிரசின் கைப்பாவையாக இருந்ததா?
எந்த நேரத்தில் அறிவித்தாலும், உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தமிழக பா.ஜ.க. தயாராக உள்ளது. ஆனால், மற்ற கட்சிகள் எங்களை பார்த்து பயப்படுகிறது.
தமிழகத்தில் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் வீடுகளில் நடந்த வருமான வரி சோதனைக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், இதை சிலர் திரித்து பேசி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.