அன்புவின் அரசியல் வாழ்க்கையை முடிக்க அசால்ட் ஸ்கெட்ச் போடும் "வேலு.. பண்ட்ருட்டி வேலு...", பயங்கர காண்டில் ராமதாஸ்!

By sathish kFirst Published Aug 13, 2019, 4:59 PM IST
Highlights

தமிழகத்தில் இப்போது இரு கட்சிகளுக்கு இடையில்தான் செம்ம போட்டி. அது பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகம்! இரண்டும்தான். எதில், ஆட்சியை பிடிப்பதிலா? என்று கேட்காதீர்கள். சிரிப்பு தான் வருது. போட்டி எதில் என்றால்....யார் முதலில் அருவம் தெரியாமல் அழிந்து போவதில்?! என்பதுதான். 

தமிழகத்தில் இப்போது இரு கட்சிகளுக்கு இடையில்தான் செம்ம போட்டி. அது பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகம்! இரண்டும்தான். எதில், ஆட்சியை பிடிப்பதிலா? என்று கேட்காதீர்கள். சிரிப்பு தான் வருது. போட்டி எதில் என்றால்....யார் முதலில் அருவம் தெரியாமல் அழிந்து போவதில்?! என்பதுதான். ஆம் இரண்டு கட்சிகளுமே தங்களின் தாறுமாறான மக்கள் செல்வாக்கையும், பட்டாஸ் கிளப்பிய தளபதிகளையும், அரசியல் கட்சி! எனும் பெயரினையும் இழந்து தவிக்கின்றன. அரசியலில் பெரும் தோல்விகளை இவ்விரண்டு கட்சிகளுமே இழந்து கொண்டே இருக்கின்றன. இதனால்தான் ‘யார் முதலில் அழிவது?’ என்பதி தேமுதிக. மற்றும் பாமக இடையில் போட்டி! என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

அதேவேளையில் இந்த இரண்டின் தலைமைகளில், கட்சியை மீட்டெடுக்கணும்’ எனும் எண்ணம் இருப்பது டாக்டர் ராமதாஸுக்குதான். அதனால் தான் மகனுக்கு அதிமுக  கொடுப்பதாக சொன்ன அந்த ஒரு சீட் வாங்கிக் கொடுத்து ஒரு வழியாக கட்சியை ஏதோ ஓரளவு அதிகார நிலையில் வைப்பதில் வெற்றி கண்டுள்ளார் ராமதாஸ். ஆனால் அதே வேளையில் கட்சியை மீண்டும் வலுவாக கட்டமைப்பதில் அவர் எடுத்த முயற்சிதான் பெரும் சவாலாக இருந்துள்ளது என அவர்கள் இறங்கியுள்ளனர்.

பாமகவை மறு சீரமைக்கும் முயற்சியில் ஒன்றாக, அதிலிருந்து கழன்று சென்ற முன்னாள் ராமதாஸின் முரட்டுத்தனமான வெய்யர்களை ரசிகனை அடித்து வெள்ளிழுத்து வாக்கஓய்வது  வெறிகளை  நிர்வாகிகளை மீண்டும் பாமகவுக்குள் அழைத்துக் கொண்டிருக்கிறார் ராமதாஸ். அதுவும் எந்த ஈகோவும் பார்க்காமல் தானே போன் போட்டு அழைத்துமிருக்கிறார். அந்த வகையில் பேராசிரியர் தீரனை அழைத்து, கன்வின்ஸ் செய்து, இணைத்துக் கொண்டவர் இப்போது அடுத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனுக்கு வலை வீசியிருக்கிறார் என்கிறார்கள். இந்த மெகா ப்ராஜெட்டுக்கான ஃபஸ்ட்  ரவுண்ட் வேலைகள் முடிந்துவிட்டன.

இது பற்றி வேல்முருகனிடம் பேசியபோது, அழைப்பு வந்ததை மறுத்தாலும்...இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை.என்றார். அத்தோடு அவர் நிறுத்தியிருந்தாலும் பரவாயில்லை, அடுத்து சொன்னதுதான் பாமகவினுள் பூகம்பத்தை கிளப்பி, ராமதாஸை ரத்தம் கொதிக்க வைத்துவிட்டது. 

அப்படி என்ன சொன்னார் தெரியுமா?........”இப்போது நானும் பாமகவுக்கு நிகராக அமைப்பு வைத்துள்ளேன் அதனால் இப்போதைக்கு பா.ம.க.வில் சேரும் எண்ணம் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் எப்படி என தெரியவில்லை. அந்த கட்சியில் நானும், காடுவெட்டி குருவும் இருந்த இடம் இன்று வரையில் காலியாகத்தான் இருக்கிறது. இப்போது அங்கு டாக்டர் ராமதாஸ் மட்டும் தான் இருக்கிறார்.

எதிகாலத்தில் பா.ம.க.வினரும், எங்கள் கட்சியினரும் விரும்பினால் இணைப்பை நடத்தி, தலைமை தாங்குவேன் என்று ஒரே போட்டாக போட்டார். 

இதில்தான் பாமக. மொத்தமாக சூடாகிவிட்டது. வேமுருகனின் கருத்தை கவனித்த ராமதாஸ் இப்போ பாமகவில் நான் மட்டும்தான் இருக்கேன்னு சொன்னால், எம்பி.யான என் மகன் அன்புமணி ஒரு தலைவன் இல்லையா? என்ன நினைச்சு பேசுறார் வேல்முருகன்?இந்த கட்சியில்தான் வளைய வந்து, சின்னய்யா சின்னய்யான்னு அன்புமணிவை அழைச்சார். அந்த காலமெல்லாம் மறந்து போச்சா? எனக்கு பிறகோ அல்லது நானிருக்கும்போதோ இங்கே இணைந்தால் வேல்முருகன் தான் இந்த கட்சிக்கு தலைவராவாரா? அவரது கட்டளைப்படி என் மகன் அரசியல் செய்ய வேண்டுமா? என்ன கொடுமய்யான பேச்சுய்யா இது! என்று கர்ஜித்துக் கொண்டிருக்கிறார். 

click me!