ராமதாசுக்கு புது தலைவலி கொடுக்கும் வேல்முருகன்... கனலரசனை அடுத்து வைக்கும் மூன்று செக்!!

By sathish kFirst Published Mar 11, 2019, 10:59 AM IST
Highlights

காடுவெட்டி குரு மறைந்ததிலிருந்து ராமதாசுக்கு, அன்புமணிக்கு குடைச்சல் மேல் குடைச்சல் கொடுத்து வருகின்றனர். முன்னாள் பாமக முக்கிய புள்ளிகள். அதில் விஜிகே மணி, காடுவெட்டி குரு மகன் கனல் அரசன் மற்றும் பண்ருட்டி வேல்முருகன் என தொடர்ந்து  தலைவலியை ஏற்படுத்தி வருகின்றனர்.

நேற்று கூட காடுவெட்டி குரு மகன் கனலரசன் மற்றும் அவரது தங்கை மீனாட்சி  செய்தியாளர்களை சந்தித்து பல தகவல்களை வெளியிட்ட நிலையில், நாடாளுமன்றத் தேர்தல்-2019இல் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கும் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடலூர் மாவட்டம், வடலூரில் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ராமதாசுக்கு எதிராக நிறைவேற்றினர் அதில்; தமிழ்நாடு சட்டமன்றத்தில் தலைவர் ராமசாமி படையாச்சியாரின் உருவப்படம் திறப்பு, கடலூரில் அவருக்கு மணிமண்டபம், தமிழகமெங்கும் சிதறிக் கிடக்கும் 3 லட்சம் கோடி மதிப்புடைய வன்னியர் சொத்துக்களைப் பாதுகாக்கும் முகமாக வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் ஆகிய மூன்று விடயங்களையும் நிறைவேற்ற தமிழக அரசு உறுதியேற்றது.

இதில் வன்னியர் பொதுச் சொத்து நல வாரியத்திற்கான ஒப்புதலும் குடியரசுத்தலைவரிடமிருந்து பெறப்பட்டுவிட்டது. ஆனால் இந்த மூன்று முயற்சிகளும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்குக் காரணம் பாமகவுடன் ஆட்சியாளர்கள் கைகோர்த்திருப்பதேயாகும். பாமகவின் தலையீடு 2009ஆன் ஆண்டு முதல் வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் அமைவதைத் தடுத்து வருகிறது.

2009ல் வாழப்பாடியார் அவர்கள் அப்போதைய முதல்வர் கலைஞரிடம் பேசி சந்திரசேகர் IAS(R) அவர்கள் தலைமையில் அரசு ஆணை எண் 37/2009ன்படி வன்னியர் பொது சொத்து நல வாரியம் அமைத்தார். அது டாக்டர் ச.ராமதாஸ் அவர்களால் தடுக்கப்பட்டது. அதன்பின் சந்தானம் IAS (R) அவர்கள் தலைமையில் நீதியரசர் பூபாலன் தாசில்தார் ராமலிங்கம் அவர்களை கொண்டு வாரியத்திற்கு உயிர் கொடுத்து 76 வன்னியர் பொது சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டம் இயற்றும் நிலையில், திமுக கூட்டணி சேர்ந்து அதைத் தடுத்தார் ராமதாஸ். 2018 இல் பல்வேறு வன்னிய அமைப்புகள் மற்றும்  வன்னிய சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில் அமைச்சர் சி.வி.சண்முகம்,அவர்கள் பரிந்துரையில் சட்டசபையில் சட்டமாக்கி, குடியரசு தலைவரிடம் ஒப்புதல் வாங்கியுள்ள நிலையில், ராமதாஸ் அதிமுகவுடன் நாடாளுமன்றக் கூட்டணி அமைத்திருக்கிறார்.

இது மூன்றாவது முறையாகவும் வன்னியர் பொதுச்சொத்து நல வாரியம் அமைப்பதை தடுப்பது மற்றும் அந்தச் சொத்துக்களை அபகரிக்கும் முயற்சியன்றி வேறென்ன? இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில சிறப்புப் பொதுக்குழு வன்னியர் சமூக மக்களின் கவனத்துக்குக் கொண்டுவருவதுடன், தமிழக அரசு இந்த மூன்று முயற்சிகளையும் உடனடியாக நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறது''. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

click me!