வேலூர் பொதுக்கூட்டம்! ஆட்களை திரட்ட படாத பாடுபட்ட டி.டி.வி தினகரன்!

Published : Aug 20, 2018, 10:22 AM ISTUpdated : Sep 09, 2018, 07:53 PM IST
வேலூர் பொதுக்கூட்டம்! ஆட்களை திரட்ட படாத பாடுபட்ட டி.டி.வி தினகரன்!

சுருக்கம்

வேலூரில் அ.ம.மு.க சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு ஆட்களை திரட்ட டி.டி.வி தினகரன் கட்சியினர் படாத பாடு பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் அ.ம.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தினகரன் பேசி வருகிறார்.

வேலூரில் அ.ம.மு.க சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு ஆட்களை திரட்ட டி.டி.வி தினகரன் கட்சியினர் படாத பாடு பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் அ.ம.மு.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தினகரன் பேசி வருகிறார். கோவையில் தினகரன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு திரண்ட கூட்டத்தை பார்த்து ஆளும் கட்சி மட்டும் அல்ல எதிர்கட்சியினரும் அதிர்ந்தனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருவாரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் நல்ல கூட்டத்தை கூட்டியிருந்தனர்.

ஆனால் திருவாரூர் பொதுக்கூட்டத்திற்கு ஆட்களை சேர்க்க பெண்களுக்கு எவர்சில்வர் பாத்திரத்திற்கான டோக்கனும், ஆண்களுக்கு பணமும் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. பெண்கள் சிலர் எவர் சில்வர் பாத்திரங்களுடன் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட புகைப்படங்களும் வெளியாகின. இதனால் அப்போதே தினகரன் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்களை அழைத்து கண்டித்ததாக தகவல் வெளியானது. கூட்டத்திற்கு எப்படி ஆள் சேர்க்கிறோம் என்கிற ரகசியத்தை இப்படியா அம்பலப்படுத்துவது என்பது தான் தினகரனின் கோபத்திற்கு காரணம் என்று சொல்லப்பட்டது.இதனால் வேலூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு ஆள் சேர்க்கும் நபர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்தது. அதே சமயம் வேலூரில் தினகரன் அணிக்கு அவ்வளவாக ஆதரவு இல்லை.

பெரும்பாலான மாவட்டங்களில் அ.தி.மு.க முன்னாள் நிர்வாகிகள் தினகரனுடன் இணைந்த நிலையில், வேலூரில் மட்டும் யாரும் தினகரனை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. மற்ற மாவட்டங்களில் இருப்பது போல் வலுவான தலைமை தினகரனுக்கு வேலூரில் இல்லை. இதனால் கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது துவக்கம் முதலே தினகரனுக்கு பிரச்சனை இருந்தது. கூட்டம் துவங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வரை போடப்பட்ட இருக்கைகள் பல காலியாகவே இருந்தன. 

இதனால் தினகரன் தொண்டர் படையினர் கூட்டத்தில் இருக்கும் சிலரை அழைத்து கூட்டம் இல்லாமல் காலியாக இருக்கும் சேர்களில் அமர வைத்தனர். அப்படியும் கூட்டம் துவங்கிய பிறகும் கூட்டம் நடைபெற்ற இடத்தின் ஒரு ஓரத்தில் போடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சேர்கள் காலியாகவே இருந்தன. இதனை கவனித்த தினகரன், நிர்வாகிகளை கூப்பிட்டு என்ன என்று கேட்டுள்ளார்?  இதனால் பதற்றம் அடைந்த நிர்வாகிகள் உடனடியாக ஓடிச் சென்று பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தவர்களை சத்தம் போட்டு உள்ளே அழைத்துக் கொண்டு வந்தனர். அதன் பிறகு சேர்கள் அனைத்தும் நிரம்பிய பிறகு பொதுக்கூட்டத்தில் தினகரன் பேசிவிட்டு புறப்பட்டு சென்றார்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!