வேலூர் இப்ராஹிமை கைவிடாத பாஜக.. தேசிய அளவில் முக்கிய பதவி வழங்கி அசத்தல்..!

By vinoth kumarFirst Published Jun 1, 2021, 5:21 PM IST
Highlights

தமிழகத்தை சேர்ந்த வேலூர் இப்ராஹிம் பாஜக தேசிய சிறுபான்மைப்பிரிவு செயலாளராக நியமிக்கப்படுவதாக அக்கட்சியில் தலைமை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த வேலூர் இப்ராஹிம் பாஜக தேசிய சிறுபான்மைப்பிரிவு செயலாளராக நியமிக்கப்படுவதாக அக்கட்சியில் தலைமை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் என்ற அமைப்பை நடத்தி வரும் சையது இப்ராகிம் கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். சிஏஏ சட்டத்தால் இந்திய இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இருக்கிறது என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கூறிவரும் நிலையில் இவர் பாதிப்பு இல்லை என்று கூறினார். இப்ராஹிம் சிறந்த பேச்சாளர். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலின்போது பாஜக போட்டியிட்ட 20 தொகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், பாஜக சிறுபான்மையினர் அணிக்கு தேசிய அளவில் 6 துணைத் தலைவர்கள், 3 பொதுச்செயலாளர்கள், 7 செயலாளர்கள், பொருளாளர் என்று நிர்வாகிகளை சிறுபான்மை அணியின் தேசியத் தலைவர் ஜமால் சித்திக் நேற்று அறிவித்தார். அதில், தேசிய செயலாளராக வேலூரை சேர்ந்த சையது இப்ராகிம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சையது இப்ராஹிம் பிரதமர் மோடி, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மாநில தலைவர் எல்.முருகன், சிறுபான்மைப் பிரிவு தேசிய தலைவர் சித்திக் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

click me!