தம்பிதுரை சம்பந்தி திமுகவில் இணைகிறார் ! டி.டி.வி.தினகரன் அதிர்ச்சி !!

Published : Jul 15, 2019, 07:26 AM IST
தம்பிதுரை சம்பந்தி திமுகவில் இணைகிறார் ! டி.டி.வி.தினகரன் அதிர்ச்சி !!

சுருக்கம்

வேலூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரையின் சம்பந்தியுமான ஞானசேகரன், திமுக தலைவர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொள்கிறார்.

வேலூர் ஞானசேகரன் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏவாக இருந்தவர். அவரது பேச்சு பெரும்பாலும் சர்ச்சையைக் கிளப்பும் வகையில்தான் இருக்கும். கடந்த முறை கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, எம்எல்ஏக்களுக்கு இலவசமாக பிளாட் ஒதுக்கித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்து பரபரப்பைக் கிளப்பினார்.

இந்நிலையில் தான் இரவது மகன் டாக்டர் நவீனும், முன்னாள் சபாநாயகர் தம்பிதுரையின் மகளுமான டாக்டர் லாசாவும் காதலித்து வந்தனர். இவர்கள் திருமணத்தை தம்பிதுரை விரும்பவில்லை.

ஞானசேகரன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் ஜெயலலிதாவுக்கு பயந்து கொண்டு  இவர்கள் திருமணத்துக்கு தம்பிதுரை சம்மதம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து தம்பிதுரை கலந்து கொள்ளாமலேயே நவீன்- லாசா திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து ஞானசேகரன் திடீரென ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஞானசேகரன் அமமுகவில் செயலாற்றி வந்தார்
.
இந்நிலையில்தான் ஞானசேகரன் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமமுகவில் இருந்தது ஒவ்வொருவராக விலகி ஓடும் நிலையில் தற்போது  ஞானசேகரனும் திமுகவில் இணையவுள்ளது தினகரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

இதே போல் அணைக்கட்டு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ கலையரசுவும் இன்று ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைகிறார். இவர் முன்னாள் பாமக எம்எலஏ என்பதும் அங்கிருந்து விலகி அதிமுகவில் ஐக்கியமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

திமுக ஆட்சிக்கு வந்ததே இவர்கள் செய்த தவறால்தான்..! ஒதுங்கிப் போற ஆள் நான் இல்லை... சசிகலா சூளுரை..!
'ராமதாஸ் - அன்புமணி சமரசத்துக்கு நான் கேரண்டி'.. இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்.. பாமகவுக்கு இத்தனை சீட்களா?