கொட்டும் மழையில் நெருப்பை கக்கிய சீமான்... வாயடைத்து வியந்த தொண்டர்கள்..!

By vinoth kumarFirst Published Jul 24, 2019, 12:05 PM IST
Highlights

தமிழகத்தில் குடிநீர் பிரச்சனைக்கு காரணம் நீர்த்தேக்கங்களை பாதுகாக்க தவறியதுதான் என்று வேலூரில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக பேசினார்.  பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் சீமானின் ஆர்வமாக கேட்டு உற்சாகமடைந்தனர். 

தமிழகத்தில் குடிநீர் பிரச்சனைக்கு காரணம் நீர்த்தேக்கங்களை பாதுகாக்க தவறியதுதான் என்று வேலூரில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கொட்டும் மழையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக பேசினார்.  பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் சீமானின் ஆர்வமாக கேட்டு உற்சாகமடைந்தனர். 

வேலூர் மக்களவை தேர்தலில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால், தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

இந்நிலையில், வேலூர் மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டத்தில் கொட்டு மழையில் சீமான் நேற்று பேசினார். இதில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கொட்டும் மழையில் பேசினார். அதில், தமிழகத்தை திராவிட கட்சியினர் அரை நூற்றாண்டு ஆண்டு விட்டார்கள். திராவிட கட்சிகளுக்கு மாற்று நாம் தமிழர் கட்சி தான். எனவே தான் அக்கட்சிகளை எதிர்த்து தொடர்ச்சியாக தேர்தலில் போட்டியிடுகிறோம். புதிதாக கட்சி தொடங்கும்போது ஊழல், லஞ்சத்தை ஒழித்து மாற்றத்தை கொண்டு வருவதாக கூறுவார்கள்.

 

ஆனால் லஞ்சம், ஊழலில் திளைக்கும் கட்சிகளுடன் அவர்கள் கூட்டணி வைப்பார்கள். அவர்களால் எப்படி மாற்றத்தை கொண்டு வர முடியும். மாற்றம் என்பது சொல் அல்ல. அது ஒரு செயல். நாம் தமிழர் கட்சி மாற்று அரசியல் புரட்சியை உருவாக்கும். எனவே பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் பெரும்பிழையாகி விடும் என்பதால் தனியாக நிற்கிறோம். வருகிற சட்டமன்ற தேர்தல் நாம் தமிழர் கட்சியை முன்நிறுத்தி தான் இருக்கும். 

தமிழகத்தில் நிலவிய குடிநீர் பிரச்சனைக்கு புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்காததும், தூர்வாரி பாதுகாக்க தவறியதும் தான் காரணம். இது யாருடைய தவறு?. தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்கள் தான் காரணம். பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு நிலத்தடி நீரை உறிஞ்ச அனுமதி கொடுத்தது யார்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.  

வேலூர் தொகுதி மக்கள் திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்க கூடாது. தமிழகத்தின் நலனை காக்க ஓட்டுக்கு பணம் வாங்காமல் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என கூறினார். பொதுகூட்டத்தில் கொட்டும் மழையில் சீமான் பேசியது ஒருபக்கம் இருந்தாலும் தொண்டர்கள் கலையாமல் அவரது பேச்சை உற்றுநோக்கியது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.

click me!