மீண்டும் அதிமுக முன்னிலை ! இரண்டாவது சுற்றில் ஏ.சி.சண்முகம் அதிக வாக்குகள் !!

Published : Aug 09, 2019, 09:25 AM IST
மீண்டும் அதிமுக முன்னிலை ! இரண்டாவது சுற்றில் ஏ.சி.சண்முகம் அதிக வாக்குகள்  !!

சுருக்கம்

வேலூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில்  ஒவ்வொரு சுற்றிலும் திமுக - அதிமுக இடையே தொடர்ந்து இழுபறியே நீடிக்கிறது. 2 ஆவது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 6438 வாக்குகள் முன்னிலை பெறுள்ளார்.

வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் இவர்கள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர். 

ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

முதல் சுற்றுக்கள் முடிவில் ,  திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 483 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.  அதிமுக - 21,660, திமுக - 21,177, நாம் தமிழர் - 400 வாக்குகள் பெற்றுள்ளன.

இந்நிலையில் இரண்டாவது சுற்று முடிவில்  அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 51 324 வாக்குகள் பெற்றுள்ளார், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 44 888 வாக்குள் பெற்று இரண்டாவது இட்த்தில் உள்ளார். வித்தியாசம் 6438 வாக்குகள்.

PREV
click me!

Recommended Stories

Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?
Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?