”முடிந்தால் நீக்கிப்பார்” - சவால் விட்ட வெல்லமண்டி நடராஜன் நீக்கம் ...

 
Published : Aug 28, 2017, 01:22 PM ISTUpdated : Sep 19, 2018, 01:07 AM IST
”முடிந்தால் நீக்கிப்பார்” - சவால் விட்ட வெல்லமண்டி நடராஜன் நீக்கம் ...

சுருக்கம்

vellamandi natarajan about ttv dinakaran

முடிந்தால் என்னை நீக்கிப்பார் என சவால் விட்ட வெல்லமண்டி நடராஜனை டிடிவி தினகரன் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார். 

அதிமுக இரு அணிகளும் ஒன்றாக இணைந்ததில் இருந்து டிடிவி தினகரன் எடப்பாடி தரப்பு நிர்வாகிகளை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கி வருகிறார். 

அந்த வரிசையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, அமைச்சர் வேலுமணி ஆகியோரும் அடங்குவர். 

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த வெல்லமண்டி நடராஜன், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் எப்படி கட்சியில் இணைந்தார் எனவும், எடப்பாடி பழனிசாமியை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க அவருக்கு அதிகாரம் இல்லை எனவும் தெரிவித்தார். 

மேலும், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சசிகலா படத்தை வைக்க முடியவில்லை. சசிகலா படத்தைப் போட்டால் மக்கள் மன்றம் புறக்கணித்துவிடும் என தெரிந்துகொண்டு வேண்டுமென்றே சசிகலா படத்தை புறக்கணித்தவர் டி.டி.வி. தினகரன் என்றும் சாடினார். 

சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மட்டும் அல்ல எதையும் எதிர்கொள்வார் எடப்பாடி பழனிசாமி எனவும், முடிந்தால் என்னை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து டி.டி.வி.தினகரன் நீக்கி பார்க்கட்டும் என சவால் விடுத்தார். 

இந்நிலையில், முடிந்தால் என்னை நீக்கிப்பார் என சவால் விட்ட வெல்லமண்டி நடராஜனை டிடிவி தினகரன் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார். 


 

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!