நீ இந்துன்னா ,,, நான் என்ன ஆப்ரிக்கா ஜந்துவா ? எச்.ராஜாவை கிழித்து தொங்கவிட்ட வேல் முருகன்…

Published : Nov 06, 2018, 06:52 AM IST
நீ இந்துன்னா ,,, நான் என்ன ஆப்ரிக்கா ஜந்துவா ? எச்.ராஜாவை கிழித்து தொங்கவிட்ட வேல் முருகன்…

சுருக்கம்

எப்படியாவது கலவரத்தைத் தூண்டிவிட்டு தமிழகத்தில் பாஜகவை காலூன்றச் செய்துவிடலாம் என நினைக்கும் எச்.ராஜாவே, நீங்கள் நினனைப்பது நடக்காது என கூறிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல் முருகன்,  போகும்  இடடெல்லாம் நான் இந்து…நான் இந்து .. என்று சொல்கிறீர்களே …அப்ப நாங்கள் எல்லாம் என்ன ஆப்பிரிக்க ஜந்துவா என எச்.ராஜாவை கிழித்து தொங்கவிட்டார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல் முருகன்  பங்கேற்ற பொதுக் கூட்டம் கடலூரில் நடைபெற்றது, அதில் பேசிய அவர், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா,  தான் செல்லும்  இடமெல்லாம் நான் ஒரு இந்து என்று சொல்லி வருகிறார்.என்ன அவர் மட்டும் தான் இந்துவா? நாங்கள் எல்லாம் ஆப்ரிக்கா ஜந்துவா? என கேள்வி எழுப்பினார்.

எனக்கு என்ன பேர் தெரியுமா ? எனது முப்பாட்டனின் பெயரான வேல்முருகனின் பெயர்தான்  எனக்கும் வைத்திருக்கிறார்கள் என தெரிவித்தார். நாங்களும் எங்களது வீடுகளில் தெருக்களில் பிள்ளையாரை வைத்து வணங்குகிறோம். உங்களைப் போல பிள்ளையாரை வைத்து அரசியல் பண்ண மாட்டோம் என்றார்.

லட்சக்கணக்கானோர் வந்து செல்லும் சபரிமலையில், திருப்பதியில்  மதக் கலவரம் எதுவும்  வருவதில்லை, ஆனால் எச்..ராஜா போகும் இடமெல்லாம் மதக் கலவரத்தை தூண்டி விடுகிறார் என வேல் முருகன், எச்.ராஜாவை  கிழி,கிழி என கிழித்து தொங்கவிட்டார்

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!