வீரபாண்டி தொகுதி வேட்பாளர் வீட்டு கழிவறையில் வழுக்கி விழுந்து உயிரிழப்பு... அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்..!

By Thiraviaraj RMFirst Published Apr 14, 2021, 11:26 AM IST
Highlights

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 207 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 207 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

 

வீரபாண்டி தொகுதியில் திமுக சார்பில் மருத்துவர் தருண், அதிமுக தரப்பில் ராஜமுத்து, அமமுக சார்பில் எஸ்.கே.செல்வம், நாதக வேட்பாளர் ராஜேஷ்குமார், ஐஜேகே வேட்பாளர் அமுதா மற்றும் சுயேச்சைகள் உட்பட மொத்தம் 20 பேர் களத்தில் இருந்தனர்.
 
இந்நிலையில், வீரபாண்டி தொகுதி சுயேச்சை வேட்பாளர் மோகன் வீட்டு கழிவறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார். கடந்த 9-ம் தேதி இரவு வீட்டில் கழிவறைக்கு சென்றபோது வேட்பாளர் மோகன் வழக்கி விழுந்தார். தலையிலும், இடுப்பிலும் பலத்த காயம் அடைந்த மோகன் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேட்பாளர்கள் தேர்தல் இசல்ட் வெளிவரு முன்பே இறக்கும் சூழலில் தேர்தல் முடிவுகளை அறியாமல் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வீட்டு கழிவறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

click me!