சிந்தனையும் செயலும் எப்போதுமே நம்ம கழகத்தை பற்றியே இருக்கணும்... உதயநிதிக்கு அட்வைஸ் பண்ணிய வீரமணி...

Published : Oct 02, 2019, 04:12 PM ISTUpdated : Oct 02, 2019, 05:09 PM IST
சிந்தனையும் செயலும் எப்போதுமே நம்ம கழகத்தை பற்றியே இருக்கணும்...  உதயநிதிக்கு அட்வைஸ் பண்ணிய  வீரமணி...

சுருக்கம்

அய்யா, அண்ணா, கலைஞர், முன்னோடி திராவிடர் இயக்கத் தலைவர்களின் பொதுவாழ்வு பற்றியும், திராவிட இயக்கக் கொள்கைப்பற்றியும் பயிற்சி கொடுங்க, உங்களின் சிந்தனையையும் செயலையும், உங்களின் சுறுசுறுப்பையும் பார்க்கும்  பொழுது சிறுவயதில் உங்க அப்பா ஸ்டாலினை பார்த்த மாதிரியே இருக்கு  என வீரமணி பாராட்டியுள்ளார்.

அமெரிக்காவில் பெரியார் விழாக்களில் கலந்துகொள்ளச் சென்ற கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர், வாஷிங்டன் மாநாடு, பாஸ்டன் விழாக்களை முடித்த நிலையில், சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற தோழர் திருவிடம் எழுதிய ‘திராவிட சிறகுகள்' நூலை வெளியிட்டுப் பேசிய திமுகவின் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதியின் உரையை, யூடியூப் மூலம் பார்த்த வீரமணி, அவரைத் தொலைப்பேசியில் அமெரிக்காவிலிருந்து அழைத்து பாராட்டியுள்ளார்.

அந்த உரையாடலில், கொள்கைப்பூர்வமான இந்த உரையையும், உணர்வையும் நமது திமுக இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்லுங்க, இயக்க வரலாறு, கொள்கைகளைத் தெரிந்து, புரிந்து வைத்திருப்பது தான் இயக்கத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் பயன் அளிக்கும்.

இயக்க வேர்களை விழுதுகள் பாதுகாப்பதும், பரப்புவதும், திராவிட மண், பெரியார் மண்ணாக தொடரச் செய்யவும் வழிவகுப்பதோடு, இயக்கத்திற்கு ஏற்படும் சோதனைகளை கொள்கையாளர்களால் மட்டுமே வெல்ல முடியும் என்பதால், நமது இயக்க இளைஞர்களை கொள்கை வயப்பட்டவர்களாக்குங்கள், அப்பணியே முதன்மைப் பணியாக அமையட்டும்! அய்யா, அண்ணா, கலைஞர், முன்னோடி திராவிடர் இயக்கத் தலைவர்களின் பொதுவாழ்வு பற்றியும், திராவிட இயக்கக் கொள்கைப்பற்றியும் பயிற்சி கொடுங்க, உங்களின் சிந்தனையையும் செயலையும், உங்களின் சுறுசுறுப்பையும் பார்க்கும்  பொழுது சிறுவயதில் உங்க அப்பா ஸ்டாலினை பார்த்த மாதிரியே இருக்கு என்று கூறினார். பதிலுக்கு உதயநிதியும் , வீரமணிக்கு  நன்றி கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!