தலைகீழா நின்னு தண்ணீர் குடிச்சாலும் இடைத்தேர்தலில் அதிமுக ஜெயிக்காது.... சீறும் கனிமொழி...!

By vinoth kumarFirst Published Oct 2, 2019, 3:56 PM IST
Highlights

கனிமொழி அதிமுக எப்பொழுதுமே பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்தித்து வருகிறது. இந்த இடைத்தேர்தலிலும் பணப்பட்டுவாடாவை அவர்கள் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து மக்கள் மத்தியிலும் தேர்தல் ஆணையத்திடம் கொண்டு செல்ல வேண்டியது ஊடகம் உள்ளிட்ட அனைவருடைய பொறுப்பு, பணத்தை நம்பி போட்டியிடும் அதிமுகவிற்கு தோல்விதான் கிடைக்கும்.

அதிமுக எவ்வளவு பணம் செலவு செய்தாலும் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் வெற்றி பெற முடியாது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக எம்.பி. கனிமொழி தற்போது நடைபெறும் இடைத்தேர்தல் முக்கியமான தேர்தல் ஆகும். வருகிற 2021-ல் நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார். அதற்கு முதல் படியாக நாங்குநேரி தொகுதி வெற்றி அமைய வேண்டும். இன்று அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவரை ஆதரித்து பிரசாரம் செய்ய பல அமைச்சர்கள் வந்துள்ளார்கள். இதற்கு முன்பு இவர்கள் வந்தது உண்டா? பொதுமக்கள் பிரச்சனை என்றால் வராதா அமைச்சர்கள் இடைத்தேர்தல் என்றதும் வந்துள்ளனர். எப்படியாவது? காசு கொடுத்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்றுவிடலாம் என நினைத்து மக்களை கொச்சைப்படுத்துகின்றனர்.

கருணாநிதி ஆட்சி காலத்தில் அவர் எந்த வெளிநாடுகளுக்கும் செல்லாமலேயே பல வெளிநாட்டு முதலீடுகள் தமிழ்நாட்டில் குவிந்தன. பல புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டது. தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்துள்ளார். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. ஆனால் எந்த முதலீடும் வரவில்லை.

மேலும் பேசிய கனிமொழி அதிமுக எப்பொழுதுமே பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்தித்து வருகிறது. இந்த இடைத்தேர்தலிலும் பணப்பட்டுவாடாவை அவர்கள் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து மக்கள் மத்தியிலும் தேர்தல் ஆணையத்திடம் கொண்டு செல்ல வேண்டியது ஊடகம் உள்ளிட்ட அனைவருடைய பொறுப்பு, பணத்தை நம்பி போட்டியிடும் அதிமுகவிற்கு தோல்விதான் கிடைக்கும். பாஜக ஆட்சியில் கொண்டு வரப்படும் மக்கள் விரோத திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தி வரும் அதிமுக ஆட்சியின் துரோகத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள் என்றார். 

click me!