தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் 1000 கோடி ஊழல்.? அண்ணாமலைக்கு தொடர்பு.?தண்டனை வாங்கி கொடுப்பேன்-வீரலட்சுமி அதிரடி

By Ajmal Khan  |  First Published Oct 22, 2023, 1:57 PM IST

சென்னை பெங்களூர் விரைவு சாலை திட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்ய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு வருவதாகவும்  அதனை தமிழர் முன்னேற்றப்படை முறியடிக்கும் என வீரலட்சுமி தெரிவித்துள்ளார். 
 


பாஜக நிர்வாகியின் முறைகேடு.?

சென்னை பெங்களூர் விரைவு சாலை திட்டத்தில் முறைகேடு நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டுத வந்தது. இது தொடர்பாக தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,  பா.ஜ.க மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி மற்றும் எம்.ஜி.பாஸ்கர் இருவரும் பல்வேறு முறைகேடுகள் செய்து சுமார் 600 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளனர். இது தொடர்பாக லஞ்ச ழிப்பு துறை மற்றும் வருமான வரித்துறையிடம் இரண்டு முறை புகார் அளிக்கப்பட்டது.  எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவே  வரும் 26 ஆம் தேதி மூன்றாவது முறையாக புகார் அளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.  

Latest Videos

undefined

அண்ணாமலைக்கு முக்கிய பங்கு

மேலும் இந்த முறைகேடுகளில் முக்கிய பங்கு வகிப்பது பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தான் என குற்றம்சாட்டினார். சென்னை பெங்களூரு விரைவு சாலை திட்டத்தில் மாலினி மற்றும் பாஸ்கருடன் சேர்ந்து சுமார் 1000 கோடி ரூபாய்க்கு விஞ்ஞான ஊழல் செய்ய அண்ணாமலை திட்டமிட்டு வருவதாகவும், அதனை தமிழர் முன்னேற்றப்படை முறியடிக்கும் என தெரிவித்தார். முறைகேடுகளில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  பா.ஜ.க மாநில மகளிர் அணி பொருளாளர் மாலினி மற்றும் எம்.ஜி.பாஸ்கர் ஆகியோரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுப்போம் எனவும் வீரலட்சுமி  தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

துர்கா ஸ்டாலின் கோயில்களுக்குச் செல்வதை பாஜகவினர் யாரும் படம் எடுக்கவில்லை.. திமுகவினரே பரப்புகின்றனர்-வானதி

click me!